Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
கேரளா பால் பாயாசம்: ஓணம் ஸ்பெஷல்
கேரளா பால் பாயாசம் என்பது சாதாரண பால் பாயாசம் போன்றது தான். ஆனால் இதில் கேரளா பச்சரிசியை பயன்படுத்தி செய்வோம். அதிலும் ஓணம் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. உங்களுக்கு ஓணம் பண்டிகை அன்று கேரளா ரெசிபிக்களை செய்து சாப்பிட ஆசை இருந்தால், கேரளா பால் பாயாசத்தை செய்து சாப்பிடுங்கள்.
இது மிகவும் சுவையுடன் இருப்பதோடு, ஆரோக்கியமானதும் கூட. சரி, இப்போது அந்த கேரளா பால் பாயாசத்தை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
கேரளா பச்சரிசி - 1/2 கப்
ஃபுல் க்ரீம் மில்க் - 1 லிட்டர் (4 கப்)
தண்ணீர் - 1/2 கப்
சர்க்கரை - 3/4 கப்
ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
செய்முறை:
முதலில் பச்சரிசியை நீரில் நன்கு கழுவி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை குக்கரில் போட்டு, அத்துடன் 2 கப் பால் மற்றும் 1/2 கப் தண்ணீர் ஊற்றி, சர்க்கரை சேர்த்து குக்கரை மூடி அடுப்பில் வைத்து, மிதமான தீயில் 1 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
விசிலானது போனதும் குக்கரை திறந்து, அதில் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி பின் மீதமுள்ள பாலை ஊற்றி, மீண்டும் அடுப்பில் வைத்து தீயை குறைவாக வைத்து, 20 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், கேரளா பால் பாயாசம் ரெடி!!!
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications