Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
காதலர் தின ஸ்பெஷல்: பாதாம் சாக்லெட் ரெசிபி
காதலர் தினத்தன்று உங்கள் காதலரை அசத்த ஆசையா? அப்படியானால், உங்கள் கையாலேயே சாக்லெட் செய்து கொடுங்கள். அதிலும் பாதாம் சாக்லெட் செய்து கொடுங்கள். இந்த ரெசிபி மிகவும் ஈஸியானது மட்டுமல்லாமல், மிகவும் சுவையாகவும் இருக்கும்.
இப்போது அந்த பாதாம் சாக்லெட் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து பார்த்த பின் முயற்சி செய்து பார்த்து எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்.

தேவையான பொருட்கள்:
கொக்கோ பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் - 50 கிராம் (உருக வைத்தது)
சர்க்கரை - தேவையான அளவு (குறைந்தது 1 கப்)
பால் பவுடர் - 1 கப்
தண்ணீர் - 3/4 கப்
சாக்லெட் மோல்டுகள் - 10-15
வென்னிலா எசன்ஸ் - 2 துளிகள்
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.
கலவையானது சற்று கெட்டியாகும் போது, அதனை அடுப்பில் இருந்து இறக்கி, அதில் பால் பவுடர் சேர்த்து உடனே கட்டி சேராதவாறு கிளறி விட வேண்டும்.
பின்பு அதில் கொக்கோ பவுடர் மற்றும் வெண்ணெய் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
பிறகு அதில் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து, எலக்ட்ரானிக் பிளெண்டர் கொண்டு கலவையை நன்கு அடிக்க வேண்டும்.
பின் அதில் பாதாம் சேர்த்து கிளறி, இறுதியில் அதனை சாக்லெட் மோல்ட்டுகளில் ஊற்றி, 45 நிமிடம் அப்படியே உலர வைத்தால், சுவையான பாதாம் சாக்லெட் ரெசிபி ரெடி!!!



Click it and Unblock the Notifications