Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
சாக்லெட் ஸ்பாஞ்ச் கேக்: தந்தையர் தின ஸ்பெஷல்
'தந்தையர் தினம்' நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த தந்தையர் தினத்தன்று உங்கள் தந்தைக்கு ஆச்சரியம் கொடுக்க நினைத்தால், அவருக்கு உங்கள் கையாலேயே கேக் செய்து கொடுங்கள். அதிலும் சாக்லெட் ஸ்பாஞ்ச் கேக் செய்து கொடுங்கள். இது மிகவும் ஈஸியான செய்முறையை கொண்டிருப்பதுடன், மென்மையாகவும் இருக்கும்.
இங்கு தந்தையர் தின ஸ்பெஷலாக சாக்லெட் ஸ்பாஞ்ச் கேக் ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து உங்கள் தந்தைக்கு கேக் செய்து கொடுத்து அவரை அசத்துங்கள்.

தேவையான பொருட்கள்:
மைதா - 1/2 கப்
பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
புளித்த தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
கொக்கோ பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 1/2 கப் (பொடி செய்தது)
வென்னிலா எசன்ஸ் - 1/2 டீஸ்பூன்
வெண்ணெய் - 1/4 கப் (உருக வைத்தது)
தண்ணீர் - 1/4 கப்
செய்முறை:
முதலில் பேக்கிங் சோடாவை, புளித்த தயிரில் சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் மைதாவில் கொக்கோ பவுடரை போட்டு கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு பௌலில் தண்ணீர் ஊற்றி, மைக்ரோ ஓவனில் வைத்து 1 நிமிடம் சூடேற்றி இறக்க வேண்டும்.
பிறகு அதில் சர்க்கரை மற்றும் உருக்கி வைத்துள்ள வெண்ணெய் சேர்த்து கட்டிகள் சேராதவாறு கிளறி விட வேண்டும்.
அடுத்து அதில் மைதா கலவை, தயிர் கலவை மற்றும் வென்னிலா எசன்ஸ் ஆகியவற்றை மெதுவாக சேர்த்து மென்மையாக கிளறி விட வேண்டும்.
இறுதியில் பேக்கிங் ட்ரேயில் எண்ணெய் தடவி, பின் கிளறி வைத்துள்ள மாவை ஊற்றி, மைக்ரோ ஓவனில் வைத்து 4 நிமிடம் பேக் செய்து இறக்கி, 10 நிமிடம் கழித்து பரிமாறினால், சாக்லெட் ஸ்பாஞ்ச் கேக் ரெடி!!!



Click it and Unblock the Notifications