Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
'குழந்தைகள் தின ஸ்பெஷல்' - பிரட் அல்வா!!!

தேவையான பொருட்கள்:
மில்க் பிரட் - 8 துண்டுகள்
பாதாம் - 12
முந்திரி - 12
ஏலக்காய் - 6
நெய் - 1 கப்
பால் - 1/2 லிட்டர்
சர்க்கரை - 1 கப்
செய்முறை:
முதலில் பிரட் துண்டுகளை நன்கு உதிர்த்துக் கொள்ளவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 கப் நெய்யை ஊற்றி காய்ந்ததும், பாதாம் மற்றும் முந்திரியை போட்டு பொன்னிறமாக வதக்கி, அவற்றை நெய்யில் இருந்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு உதிர்த்த பிரட் துண்டுகளை நெய்யில் போட்டு, பொன்னிறமாக வதக்கவும். பின் அவற்றை இறக்கி விடவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, கொதிக்க விடவும். பாலானது நன்கு கொதிக்கும் போது அதில் சர்க்கரையை போடவும். சர்க்கரை கரையும் வரை அடுப்பில் வைக்க வேண்டும்.
அதற்குள் பொன்னிறமாக வதக்கி வைத்துள்ள முந்திரி மற்றும் பாதாமில் 4 துண்டுகளை தனியாக எடுத்து வைத்து விட்டு, மீதமுள்ளவற்றை சிறிது தண்ணீர் ஊற்றி, பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும்.
இப்போது அந்த பேஸ்ட்டை கொதிக்கும் பாலில் சேர்த்து, தீயை குறைவில் வைத்து 3-4 நிமிடம் கொதிக்க விடவும்.
பின்பு வறுத்து வைத்துள்ள பிரட் தூளை அந்த பாலில் சேர்த்து, தீயை குறைவிலேயே வைத்து, 5-6 நிமிடம் வேக வைக்கவும். இதற்குள் பாலானது வற்றி, அல்வா போன்று வந்துவிடும்.
பின்னர் இதன் மேல் பாதாம் மற்றும் முந்திரியால் அலங்கரிக்க வேண்டும்.
இப்போது சுவையான பிரட் அல்வா ரெடி!!! இதனை சூடாகவோ அல்லது குளிர்ச்சியுடனோ சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications