Latest Updates
-
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
தினமும் வீட்டில் கற்பூரத்துடன் பிரியாணி இலை சேர்த்து எரிங்க.. அப்புறம் நடக்குறத பாருங்க.. ஆச்சரியப்படுவீங்க.. -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த நெல்லை ஸ்டைல் கொத்சை ட்ரை பண்ணுங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிகள் எல்லோரையும் அவங்க கட்டுப்பாட்டில் வைத்து ஆட்டி படைப்பவர்களாக இருப்பார்களாம் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பாரம்பரிய நெய் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
டாய்லெட் பேப்பரை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க -
இந்த பிரச்சனை இருந்தா, பூண்டு அதிகமா சாப்பிடாதீங்க.. - எச்சரிக்கும் டாக்டர்! -
நாகர்கோயில் வாழைக்காய் துவட்டல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
வெயிலுக்கு இதமான மோர் ரசமும், வெண்டைக்காய் சிப்ஸும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க!
Summer Special Mor Rasam With Vendakkai Chips Recipe In Tamil: வெயில் மண்டையை பிளந்து கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட வெயில் காலத்தில் மதிய வேளையில் சிம்பிளாக சமையலை முடிக்க நினைக்கிறீர்களா? அதே சமயம் உடலுக்கு குளுகுளுவென்று இதமாகவும் இருக்க வேண்டுமா? அப்படியானால் மோர் ரசம் செய்யுங்கள். அதுவும் இந்த மோர் ரசத்தை செய்து, அதற்கு சைடு டிஷ்ஷாக வெண்டைக்காய் சிப்ஸை வைத்துக் கொண்டால், சுவை பிரமாதமாக இருக்கும்.

இந்த மோர் ரசம் மற்றும் வெண்டைக்காய் சிப்ஸ் ரெசிபி குறித்து அம்மா சமையல் வீடியோஸ் என்னும் யூடியூப் தளத்தில் பகிரப் பட்டுள்ளது. உங்களுக்கு இந்த மோர் ரசம் மற்றும் வெண்டைக்காய் சிப்ஸ் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மோர் ரசம் மற்றும் வெண்டைக்காய் சிப்ஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* துவரம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* மல்லி - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
மோர் செய்வதற்கு..
* புளிப்பில்லாத கெட்டி தயிர் - 3/4 கப்
* அரிசி மாவு - 3/4 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1 கப் + 1 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* பச்சை மிளகாய் - 2
* பூண்டு - 7 பல்
* சின்ன வெங்காயம் - 10
* தக்காளி - 1/2 (பொடியாக நறுக்கியது)
* பெருங்காயத் தூள் - 4 சிட்டிகை
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கொத்தமல்லி - சிறிது
வெண்டைக்காய் சிப்ஸிற்கு...
* வெண்டைக்காய் - 1/2 கிலோ
* உப்பு - சுவைக்கேற்ப
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* கடலை மாவு - 3 டீஸ்பூன்
* அரிசி மாவு - 1 1/2 டீஸ்பூன்
* எலுமிச்சை - பாதி
* தண்ணீர் - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் துவரம் பருப்பு, மல்லி, மிளகு, சீரகம்
சேர்த்து சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் கெட்டி தயிரை எடுத்து, அத்துடன்
சுவைக்கேற்ப உப்பு மற்றும் அரிசி மாவை சேர்த்து, பின் அதில் 1 கப்
நீரை ஊற்றி மத்து கொண்டு நன்கு கடைந்து விட வேண்டும்.
* அதன் பின் அதில் மஞ்சள் தூளை சேர்த்து நன்கு கலந்து தனியாக வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, வரமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின்பு அதில் தட்டி வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அதன் பின் நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு
வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் விதைகளை நீக்கிய பாதி தக்காளியை பொடியாக நறுக்கி
சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் அரைத்து வைத்துள்ள மிளகு விழுதை சேர்த்து நல்ல வாசனை
வரும் வரை வதக்கி, பின் அதில் சிறிது நீரை சேர்த்து கிளறி விட
வேண்டும்.
* பிறகு அதில் கறிவேப்பிலை, கொத்தமல்லி, மோர் சேர்த்து, உப்பு சுவை
பார்த்து வேண்டுமானால் உப்பு சேர்த்து கிளறி, மிதமான தீயில் வைத்து 1
கொதி வந்ததும், அதை இறக்கினால், சுவையான மோர் ரசம் தயார்.
* அடுத்து வெண்டைக்காய் சிப்ஸ் செய்ய, வெண்டைக்காயை நீரில் கழுவி
துடைத்துவிட்டு, முனைகளை நீக்கிவிட்டு, நீளத் துண்டுகளாக்கிக் கொள்ள
வேண்டும். முக்கியமாக அதில் உள்ள விதைகளை நீக்கிவிட வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் வெண்டைக்காயை எடுத்து, அத்துடன்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், மல்லித் தூள்,
சீரகத் தூள், மிளகுத் தூள், கரம் மசாலா, கடலை மாவு, அரிசி மாவு
சேர்த்து கைகளால் நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் பாதி எலுமிச்சையின் சாற்றினை சேர்த்து, பின் 1
டீஸ்பூன் நீரை ஊற்றி கைகளால் நன்கு கிளறி, 10 நிமிடம் ஊற வைக்க
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரட்டி வைத்துள்ள வெண்டைக்காயை
சேர்த்து நன்கு மொறுமொறுவென்று பொரித்து எடுத்தால், சுவையான
வெண்டைக்காய் சிப்ஸ் தயார்.



Click it and Unblock the Notifications