Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
முட்டையுடன் இந்த பொருளை சேர்த்து செய்தால் சுவையான ஸ்பானிஷ் ஆம்லெட் ரெடி... ட்ரை பண்ணி பாருங்க...!
Spanish Omlette Recipe in Tamil: முட்டை என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது ஆம்லெட்தான். நறுக்கிய வெங்காயத்துடன், மிளகுத்தூள், உப்பு சேர்த்து தோசைக்கல்லில் ஊற்றும் போது அதன் வாசனையே நமக்கு பசியைத் தூண்டும். நம் நாட்டில் பெரும்பாலும் ஆம்லெட்டை மற்ற உணவுகளுக்கு சைடிஷாகத்தான் எடுத்துக் கொள்வோம் அல்லது சாப்பிட்டு முடித்துவிட்டு பைனல் டச்சாக சாப்பிடுவோம். ஆனால் வெளிநாடுகளில் காலை உணவாகவே ஆம்லெட்தான் உள்ளது.
மேற்கத்திய நாடுகளில் பல ஆம்லெட் வகைகள் உள்ளது, அதில் மிகவும் பிரபலமான ஒன்றுதான் ஸ்பானிஷ் ஆம்லெட். உருளைக்கிழங்கு சேர்த்து செய்யப்படும் இந்த ஆம்லெட் காலை உணவாக உட்கொள்ளப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த ஆம்லெட் பல ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. இந்த பதிவில் சுவையான ஸ்பானிஷ் ஆம்லெட்டை எப்படி செய்ய செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- முட்டை - 4
- நறுக்கிய உருளைக்கிழங்கு - 2
- நறுக்கிய வெங்காயம் - 1
- நறுக்கிய தக்காளி - 1
- ஆலிவ் எண்ணெய் - 3 ஸ்பூன்
- நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு
- மிளகுத்தூள் - தேவையான அளவு
- உப்பு - தேவைக்கு ஏற்ப
செய்முறை:
- உருளைக்கிழங்கை தோல்களை நீக்கி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி ஓரமாக வைத்துக்கொள்ளவும். அதேபோல வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் ஆலிவ் எண்ணெயை சூடாக்கி, அதில் உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து, பாதி மூடி வைத்து உருளைக்கிழங்கு மென்மையாகும் வரை வேகவைக்கவும், அவ்வப்போது கிளறி விடவும். உருளைக்கிழங்கு, தக்காளி மற்றும் வெங்காயத்தை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும். மீதமுள்ள எண்ணெயை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- ஆலிவ் எண்ணெய் இல்லையென்றால் வீட்டு சமையல் எண்ணெயையும் பயன்படுத்தலாம். ஆனால் ஆலிவ் எண்ணெயில் செய்தால்தான் இதன் சுவை முழுமையாக கிடைக்கும்.
- முட்டைகளை தனியாக அடித்து வைத்துக்கொள்ளவும், பின்னர் அதை உருளைக்கிழங்கு மீது ஊற்றவும், மேலும் கொத்தமல்லி மற்றும் தேவையான உப்பு மற்றும் மிளகு சேர்த்து கிளறவும்.
- ஒரு சிறிய கடாயில் வடிகட்டிய எண்ணெயைசேர்த்து சிறிது சூடாக்கவும். அதில் முட்டைக் கலவையை ஊற்றி, மிதமான சூட்டில் வேக வைக்கவும், ஒரு தோசைக் கரண்டியைப் பயன்படுத்தி வட்ட வடிவில் ஆம்லெட் போல கொண்டு வரவம்.
- கிட்டத்தட்ட ஆம்லெட் வெந்ததும் அதன் மூலைகளை கரண்டியை வைத்து மூலைகளை அமுக்கி விடவும்.
- இதை ஒரு தட்டுக்கு மாற்றி மிதமான சூட்டில் சாப்பிட்டால் சுவையான மற்றும் ஆரோக்கியமான காலை உணவு ரெடி.



Click it and Unblock the Notifications