Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
மீல் மேக்கர் வெச்சு ஒருடைம் இப்படி வெள்ளை குருமா செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்...
Mealmaker White Kurma Recipe In Tamil: காலையில் இட்லி, தோசை, சப்பாத்திக்கு எப்போதும் ஒரே மாதிரியான சைடு டிஷ் செய்து போரத்துவிட்டதா? சற்று வித்தியாசமாகவும், நாவில் உள்ள சுவை மொட்டுகளுக்கு விருந்தளிக்கும் வகையில் ஒரு கிரேவி அல்லது குருமாவை செய்ய நினைக்கிறீர்களா?
அப்படியானால் வீட்டில் மீல் மேக்கர் இருந்தால், அதைக் கொண்டு வெள்ளை குருமாவை செய்யுங்கள். இந்த குருமா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்குடியவாறு இருக்கும்.

உங்களுக்கு மீல்மேக்கர் வெள்ளை குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீல்மேக்கர் வெள்ளை குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* தேங்காய் - 1/4 கப்
* முந்திரி - 5-6
* இஞ்சி - 1 இன்ச்
* பச்சை மிளகாய் - 3-4
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 2
* கசகசா - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 6-7
குருமாவிற்கு...
* மீல் மேக்கர் - 1 கப் (சுடுநீரில் ஊற வைத்தது)
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 2
* கல்பாசி - சிறு துண்டு
* பிரியாணி இலை - 1
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* புதினா - சிறிது
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் தேங்காய், முந்திரி, இஞ்சி, பச்சை
மிளகாய், பட்டை, கிராம்பு, கசகசா, சோம்பு, பொட்டுக்கடலை மற்றும் சின்ன
வெங்காயத்தை சேர்த்து சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து
தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மீல் மேக்கரை சுடுநீரில் 20 நிமிடம் ஊற வைத்து, பின் அதில்
உள்ள அதிகப்படியான நீரை பிழிந்துவிட்டு, தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி, பிரியாணி இலை
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க
வேண்டும்
* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், புதினா சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது மற்றும் தேவையான அளவு
நீரையும், உப்பையும் சேர்த்து, நன்கு 10 நிமிடம் கொதிக்க வைத்து
இறக்கினால், சுவையான மீல் மேக்கர் வெள்ளை குருமா தயார் !



Click it and Unblock the Notifications