Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
2 முட்டையும், 1 கப் மீல் மேக்கரும் இருந்தா இந்த சைடிஷை டக்குனு பண்ணுங்க..தோசை, சப்பாத்திக்கு டக்கரா இருக்கும்!
Soya Egg Masala Recipe in Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி முட்டை செய்வீர்களா? எப்போதும் முட்டையை ஒரே சுவையில் தான் செய்வீர்களா? அதுவும் சாதத்திற்கு என்று கிரேவி, பொடிமாஸ் என்று தான் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை முட்டையை வைத்து இந்த சோயா முட்டை மசாலாவை செய்யுங்கள். இந்த சோயா முட்டை மசாலா சப்பாத்தி, பூரி, தோசை என அனைத்திற்கும் செம காம்பினேஷனாக இருக்கும். மேலும் இரண்டுமே புரோட்டின் நிறைந்ததாக இருப்பதால் இது மிகவும் ஆரோக்கியமானதும் கூட.
இந்த சோயா முட்டை மசாலா தாபா ஸ்டைலில் ஹோட்டலில் சாப்பிடும் சுவையிலேயே இருக்கும். இப்படி வித்தியாசமான முட்டை மசாலா செய்தால், வீட்டில் உள்ளோர் அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள். முக்கியமாக இந்த சோயா முட்டை மசாலா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். அதோடு இது பேச்சுலர்கள் செய்யக்கூடிய வகையில் ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு சூப்பரான சோயா முட்டை மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சோயா முட்டை மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- மீல் மேக்கர் - 1 கப்
- முட்டை - 2
- எண்ணெய் - கால் கப்
- பச்சை மிளகாய் - 2
- தக்காளி - 1
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- பெரிய வெங்காயம் - 1
- மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
- தண்ணீர் - 2 கப்
- மிளகு தூள் - 1 ஸ்பூன்
- கடுகு - அரை ஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கொத்து
- துருவிய தேங்காய் - கால் கப்
- கடலை மாவு - 2 ஸ்பூன்
- சீரகம் - 1 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- கொத்தமல்லி - 2 ஸ்பூன்
செய்முறை:
- முதலில் மீல் மேக்கரை சூடான நீரில் 10 நிமிடம் ஊற வைக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி கடுகு போட்டு தாளிக்கவும்.
- கடுகு வெடித்ததும் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, நறுக்கிய தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பின்னர் தேங்காய் துருவலைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
- தேங்காய் நிறம் மாறியதும் அடுப்பை அணைத்து ஒரு கிண்ணத்துக்கு மாற்றி ஆற வைக்கவும்.
- ஆறியதும், இந்த கால்வாயை மிக்ஸியில் சேர்த்து, ¼ கப் தண்ணீர் சேர்த்து மென்மையான பேஸ்டாக அரைக்கவும்.
- பின்னர் மீல் மேக்கரை சோயா துண்டுகளிலிருந்து தண்ணீர் முழுவதையும் பிழிந்து எடுக்கவும்.
- ஒரு பாத்திரத்தில், வடிகட்டிய சோயா துண்டுகள், மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள், உப்பு, கடலை மாவு சேர்த்து நன்கு கலக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, மசாலா கலந்த சோயா துண்டுகளைச் சேர்த்து, சில நிமிடங்கள் வறுக்கவும். வாணலியில் இருந்து எடுத்து தனியாக வைக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, சீரகம், பெரிய வெங்காயம் சேர்த்து, அது கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கவும்.
- பின்னர் அரைத்த மசாலா விழுதைச் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
- பின்னர் இரண்டு முட்டைகளை உடைத்து நன்றாக கலக்கி விடவும்.
- ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், ½தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
- அதன்பின் வறுத்த மீல் மேக்கர், 2 கப் தண்ணீர் சேர்த்து, மூடி வைத்து, 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
- குழம்பு நன்கு கொதித்து வாசனை வந்ததும் மிளகுத்தூள் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து கலந்து அடுப்பை அணைக்கவும்.
- அவ்வளவுதான் சூப்பரான சோயா முட்டை மசாலா தயார். இது தோசை, சப்பாத்தி, சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications