Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
120 ஆண்டுக்கு பின் மார்ச் மாதம் உருவாகும் திரிகிரஹி யோகம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியப்போகுது!
ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களும் குறிப்பிட்ட காலத்திற்கு பின் தங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றிக்கொண்ட இருக்கின்றன. கிரகங்கள் தொடர்ந்து நகரும் போது அவை மற்ற கிரகங்களுடன் இணைந்து சில சக்தி வாய்ந்த ராஜயோகங்களை உருவாக்குகின்றன. அந்த வகையில் மார்ச் மாத தொடக்கத்தில் ஒரு சக்திவாய்ந்த ராஜயோகத்தை உருவாக்குகிறது.
சனிபகவான் 2026 வருடம் முழுவதும் மீன ராசியில் இருப்பார். மார்ச் 2 ஆம் தேதி, சுக்கிரன் மீன ராசிக்குள் நுழையப்போகிறார், அதேசமயம் மார்ச் 15 ஆம் தேதி, சூரியன் இந்த ராசிக்கு தனது பயணத்தைத் தொடங்குகிறார். இந்த மூன்று கிரகங்களும் இணைந்து சக்திவாய்ந்த திரிகிரஹி யோகத்தை உருவாக்கப்போகிறது. இந்த யோகம் சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு சிறப்பான நன்மைகளை அளிக்கப்போகிறது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு திரிகிரஹி யோகம் அற்புதமான பலன்களை அளிக்கப்போகிறது. இந்த யோகத்தால் அவர்கள் சிறப்பான நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் அவர்களின் புத்திசாலித்தனம் பல மடங்கு அதிகரிக்கும், இதனால் அவர்கள் பல்வேறு துறைகளில் வெற்றி பெறலாம்.
தொழில் வாழ்க்கையைப் பொறுத்தவரை, வேலைக்காக அவர்கள் நீண்ட தூரம் பயணிக்கலாம், இந்த பயணங்கள் அவர்களுக்கு சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும். வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் நீங்கள் லாபம் ஈட்டலாம், மேலும் வணிகத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் துணையுடனான நீண்டகால வாக்குவாதங்கள் இப்போது முடிவுக்கு வந்து குடும்ப வாழ்க்கையில் அமைதி நிலவும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு திரிகிரஹி யோகம் மிகவும் சாதகமான பலன்களை வழங்கப்போகிறது. புதிய வருமான ஆதாரங்கள் உருவாகலாம். பழைய கடனில் இருந்து விடுபட வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக வியாபாரம் தொடங்க விரும்புபவர்கள் இறுதியாக இப்போது அதை தொடங்கலாம்.
கிரகங்களின் ஆசீர்வாதத்தால் அவர்கள் பல சாதனைகளை அவர்கள் செய்யலாம். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். திருமணமாகாதவர்கள் இப்போது அவர்களுக்கு பொருத்தமான துணையைக் கண்டறிய முடியும். கடின உழைப்பிற்கான பலன்கள் தேடிவரும். நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட வாகனத்தை வாங்க வாய்ப்பு கிடைக்கும். இந்த காலகட்டத்தில் அவர்களின் ஆரோக்கியம் வலுவாக இருக்கும்.
மகரம்
கர ராசிக்காரர்களுக்கும் திரிகிரஹி யோகம் அபரிமிதமான நன்மைகளை அளிக்கப்போகிறது. இது அவர்களுக்கு வெற்றிகள் குவியும் காலமாக இருக்கும். கடந்த கால கடன் பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரும். வியாபாரத்தைப் பொறுத்தவரை இது மகர ராசிக்காரர்களுக்கு இது மிகவும் சாதகமான நேரமாகும்.
அவர்கள் வாழ்க்கையில் திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்வார்கள். குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வேலையில் இருப்பவர்களுக்கு சில புதிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும். மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் ஒத்துழைப்புடன், அனைத்துப் பொறுப்புகளையும் துல்லியமாக மேற்கொள்ள முடியும். ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
கும்பம்
இந்த திரிகிரஹி யோகத்தால் கும்ப ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகிறது. இந்த யோகத்தால் தேவையற்ற செலவுகள் குறைந்து வருமானம் அதிகரிக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தரும் பல விஷயங்கள் நடக்க வாய்ப்புள்ளது.
இதனால் மனரீதியான சிக்கல்கள் முடிவுக்கு வரும். பெற்றோரிடமிருந்து நிதி உதவி கிடைக்கும். சகோதர சகோதரிகளுடன் இணைந்து புதிய வியாபாரம் தொடங்க வாய்ப்புகள் உருவாகும். நிலம் தொடர்பான பரிவர்த்தனைகளில் லாபம் ஏற்படும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி நிலவும். வேலை தேடுபவர்களுக்கு அதிக சம்பளத்தில் புதிய வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
