Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
தோசைக்கு சைடு டிஷ் செய்ய சோம்பேறித்தனமா இருக்கா? அப்ப இந்த மாதிரி தோசை சுடுங்க...
Soya Egg Masala Dosa Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி தோசை செய்வீர்களா? அந்த தோசைக்கு எப்போதும் சைடு டிஷ்ஷை யோசித்து போரடித்துவிட்டதா? அப்படியானால் அடுத்தமுறை தோசைக்கு சைடு டிஷ் எதுவும் செய்யாதீர்கள். மாறாக, வீட்டில் முட்டையும், மீல் மேக்கரும் இருந்தால், அவற்றைக் கொண்டு மசாலா செய்து, தோசையின் மேல் பரப்பி மசாலா தோசை போன்று செய்து கொடுங்கள்.
இப்படி தோசை சுடும் போது, அதற்கு எந்த ஒரு சைடு டிஷ்ஷும் தேவைப்படாது. சொல்லப்போனால் இப்படி தோசை சுட்டுக் கொடுத்தால், வீட்டில் உள்ளோர் கணக்கில்லாமல் சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த தோசை பேச்சுலர்கள் செய்வதற்கு ஏற்றவாறு ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு மீல்மேக்கர் முட்டை மசாலா தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீல்மேக்கர் முட்டை மசாலா தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தோசை மாவு
* முட்டை
* சோயா - 1/2 கப்
* சுடுநீர் - 1 1/2 கப்
அரைப்பதற்கு...
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1
* கறிவேப்பிலை - சிறிது
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
மசாலாவிற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 4 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் கொதிக்கும் சுடுநீரில் மீல் மேக்கரை சேர்த்து 10 நிமிடம்
ஊற வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, மீல் மேக்கரை எடுத்து, அதில் உள்ள அதிகப்படியான
நீரைப் பிழிந்துவிட்டு, மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய்,
கறிவேப்பிலை, சீரகம், சோம்பு சேர்த்து ஒருமுறை அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளறி, அரைத்து வைத்துள்ள
மசாலாவை சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா
சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி கிளறி, 4 டேபிள் ஸ்பூன் நீரை ஊற்றி
கிளறி மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின் அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், தோசை ஊற்றி,
பின் அதன் மேல் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி பரப்பி, தயாரித்து
வைத்துள்ள மசாலாவைப் பரப்பி எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக
வைத்து எடுத்தால், சுவையான மீல் மேக்கர் முட்டை மசாலா தோசை தயார்.



Click it and Unblock the Notifications