Latest Updates
-
இராவணனுக்கு 10 தலைகள் கிடைத்ததற்கு பின்னால் உள்ள கதை என்ன தெரியுமா? அந்த 10 தலைகளின் அர்த்தம் என்ன தெரியுமா? -
3/4 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி கெட்டி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
பொரி மிச்சமிருந்தா இந்த மாதிரி மொறுமொறுனு வடை சுடுங்க - டீ, காபியோட சாப்பிட சூப்பரா இருக்கும் -
லென்ஸ் போட்டிருக்கீங்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க.. பார்வைக்கே ஆபத்தாயிடும் - எச்சரிக்கும் கண் டாக்டர்! -
பாபா வங்கா கணிப்பு படி 2027-ல் உலகத்தில் நடக்கப்போகும் மாற்றங்களும், அழிவுகளும் - ஷாக் ஆகாதீங்க -
நவம்பரில் சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
நாயர் கடை வெங்காய சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 21, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் அடிக்கப்போகுதாம் -
புதன் உதயத்தால் தொழில் வாழ்க்கையில் புதிய உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
November Matha Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. நவம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
பிரட் பீட்ரூட் பால்ஸ்
மாலையில் எப்போதும் பஜ்ஜி, போண்டா என்று செய்து சாப்பிடாமல், உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையில் ஏதாவது ஒரு காய்கறிகளைக் கொண்டு வித்தியாசமான முறையில் சமைத்து சாப்பிடலாம் அல்லவா? இங்கு பீட்ரூட் கொண்டு செய்யப்படும் ஓர் அற்புதமான சமையல் கொடுக்கப்பட்டுள்ளது.
அது தான் பிரட் பீட்ரூட் பால்ஸ். இது மாலையில் சாப்பிட ஏற்ற ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி. சரி, இப்போது பிரட் பீட்ரூட் பால்ஸ் ரெசிபியை எப்படி வீட்டிலேயே எளிமையாக செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
பிரட் - 10
உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து மசித்தது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பீட்ரூட் - 1 கப் (துருவியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
சோளமாவு - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் + வறுப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் துருவிய பீட்ரூட்டை சேர்த்து, உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.
பின்னர் அதில் பச்சை மிளகாய், கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி, பின் மசித்த உருளைக்கிழங்கையும் சேர்த்து பிரட்டி இறக்கி, குளிர வைத்து, அக்கலவையை சிறு சிறு உருண்டைகளாகப் பிரித்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்பு பிரட் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து, அதனை பக்கவாட்டில் உள்ள ப்ரௌன் பகுதியை நீக்கிவிட்டு, வெள்ளைப் பகுதி நீரில் நனைத்து பிழிந்து ஒரு பௌலில் வைத்துக் கொள்ளவும்.
பிறகு அந்த பிரட் கலவையை, எத்தனை பீட்ரூட் உருண்டைகள் உள்ளதோ, அந்த அளவில் சிறு சிறு உருண்டைகளாக பிரித்துக் கொள்ள வேண்டும்.
பின் பிரட் உருண்டையை எடுத்து, தட்டையாக தட்டி, அதன் நடுவே பீட்ரூட் உருண்டையை வைத்து மூட வேண்டும். இப்படி அனைத்தையும் செய்ய வேண்டும்.
அடுத்து அந்த உருண்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து சோள மாவில் பிரட்டி, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இறுதியில் ஒரு அகன்ற வாணலியில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இந்த உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், பிரட் பீட்ரூட் பால்ஸ் ரெடி!!!



Click it and Unblock the Notifications
