Latest Updates
-
ரோட்டுக்கடை முட்டை சேர்வா ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
இந்திய ராணுவத்தில் எவ்வளவு பெண்கள் உள்ளார்கள்? எந்த நாட்டு இராணுவத்தில் அதிக பெண்கள் இருக்கிறார்கள் தெரியுமா? -
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
தினமும் வீட்டில் கற்பூரத்துடன் பிரியாணி இலை சேர்த்து எரிங்க.. அப்புறம் நடக்குறத பாருங்க.. ஆச்சரியப்படுவீங்க..
சைனீஸ் சால்ட் அண்ட் பெப்பர் டோஃபு
மாலையில் வீட்டிலேயே அருமையான ஓர் சைனீஸ் ஸ்நாக்ஸ் செய்து சுவைக்க ஆசைப்பட்டால், புரோட்டீன் மற்றும் கால்சியம் அதிகம் நிறைந்த டோஃபு கொண்டு சுவையான ஓர் சைனீஸ் ரெசிபியை செய்து சுவையுங்கள். இந்த ரெசிபிக்கு பெயர் சால்ட் அண்ட் பெப்பர் டோஃபு. இது பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
சரி, இப்போது அந்த சைனீஸ் சால்ட் அண்ட் பெப்பர் டோஃபு ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து மகிழுங்கள்.

தேவையான பொருட்கள்:
டோஃபு - 200 கிராம்
உப்பு - தேவையான அளவு
மிளகுத் தூள் - தேவையான அளவு
சோள மாவு - 3-4 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 4-5 டேபிள் ஸ்பூன்
மசாலாவிற்கு...
எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
சோயா சாஸ் - 2 டீஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகுத் தூள் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் டோஃபுவை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின் அதில் உப்பு மற்றும் மிளகுத் தூள் தூவி கிளறி, பின் அதில் சோள மாவைத் தூவி பிரட்டி விட வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், டோஃபுவை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு, இஞ்சி, வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் சர்க்கரை சேர்த்து கிளறி, சோயா சாஸ் சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.
பிறகு அதில் வதக்கி வைத்துள்ள டோஃபுவை சேர்த்து, தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத் தூள் தூவி கிளறி இறக்கினால், சைனீஸ் சால்ட் அண்ட் பெப்பர் டோஃபு ரெடி!!!
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications