Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
பட்டாணி மற்றும் கார்ன் சாலட்
சாலட் ஒரு அருமையான மற்றும் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ரெசிபி. அந்த சாலட்டுகளில் பல வெரைட்டிகள் உள்ளன. அவை அனைத்தும் விருப்பத்தைப் பொறுத்ததே. அந்த வகையில் இங்கு குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு ஒரு அருமையான சாலட் ரெசிபியைக் கொடுத்துள்ளோம்.
அது தான் பட்டாணி மற்றும் கார்ன் சாலட். இதனை உடல் எடையை குறைக்க நினைப்போரும் சாப்பிடலாம். சரி, இப்போது அந்த பட்டாணி மற்றும் கார்ன் சாலட் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
வேக வைத்த பட்டாணி - 1 கப்
வேக வைத்த கார்ன்/சோளம் - 1/2 கப்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
எலுமிச்சை சாறு - தேவையான அளவு
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
துருவிய சீஸ் - சிறிது
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் பட்டாணி மற்றும் சோளத்தைப் போட்டு, பின் அதில் வெங்காயம், தக்காளி மற்றும் கொத்தமல்லி சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
அடுத்து அதன் மேல் துருவிய சீஸை தூவி நன்கு கலந்து பரிமாறினால், ஆரோக்கியமான பட்டாணி கார்ன் சாலட் ரெசிபி ரெடி!!!



Click it and Unblock the Notifications