Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
சரவணபவன் வெண்டைக்காய் பொரியல் ரெசிபி... இந்த மாதிரி செய்யுங்க... பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க...!
Saravana Bhavan Vendakkai Poriyal Recipe in Tamil: ஆரோக்கியமான வாழ்க்கைக்கு காய்கறிகளை சாப்பிட வேண்டியது மிகவும் அவசியம்.ஆரோக்கியமான காய்கறிகள் என்று வரும்போது அதில் வெண்டைக்காய் மிகவும் முக்கியமானதாகும். உங்கள் வீட்டில் உள்ளோர் வெண்டைக்காய் செய்தாலே சாப்பிடமாட்டார்களா? அப்படியானால் ஹோட்டலில் பரிமாறப்படும் வெண்டைக்காய் பொரியல் போல முயற்சித்துப் பாருங்கள்.
இந்த பக்குவத்தில் வெண்டைக்காயை பொரியல் செய்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஹோட்டல்களில் பரிமாறப்படும் சுவையில் வெண்டைக்காய் பொரியலை செய்வது அவ்வளவு கடினமானதல்ல, சொல்லப்போனால் அது மிகவும் எளிதானதாகும்.

உங்களுக்கு இந்த ஹோட்டல் ஸ்டைல் வெண்டைக்காய் பொரியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹோட்டல் ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- கால் கிலோ வெண்டைக்காய்
- 1 பச்சை மிளகாய்
- 3 பூண்டு
- 1 கப் சின்ன வெங்காயம்
- அரை ஸ்பூன் மிளகாய்த்தூள்
- தேவையான அளவு உப்பு
- 1 சிட்டிகை மஞ்சள் தூள்
- 2 ஸ்பூன் தேங்காய்
- 1 ஸ்பூன் வறுத்த வேர்க்கடலை
தாளிக்க:
- 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- 1/2 டேபிள் ஸ்பூன் கடுகு
- 1 டேபிள் ஸ்பூன் சோம்பு
- 1/2 டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு
- 1 டேபிள் ஸ்பூன் சீரகம்
- சிறிதளவு கறிவேப்பிலை
- 1 வர மிளகாய்
செய்முறை:
- முதலில் வெண்டைக்காயை நன்றாக கழுவி உலர வைத்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அதேபோல தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும் மற்றும் வேர்க்கடலையை பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.
- எண்ணெய் சூடானதும் அதில் கடுகை போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் கடலைப்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, சோம்பு மற்றும் வர மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- பின்னர் பச்சை மிளகாய், நசுக்கிய பூண்டு மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
- வெங்காயம் நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள் மற்றும் உப்பை சேர்த்து நன்றாக கலக்கவும்.
- பின்னர் நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து நன்றாக கிளறவும். வெண்டைக்காய் நன்றாக வெந்தும் அதன் வளவளப்பு தன்மை போகும் வரை வதக்கவும்.
- பின்னர் உப்பு சரிபார்த்து உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கிளறவும்.
- வெண்டைக்காய் நன்றாக வெந்து தண்ணீர் சுண்டியதும் தேங்காய் துருவல் நன்றாக கிளறவும்.
- இறுதியாக அரைத்த வேர்க்கடலை பொடியைச் சேர்த்து 2 நிமிடங்கள் கிளறினால் சுவையான ஹோட்டல் ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல் தயார்.



Click it and Unblock the Notifications