Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
சர்க்கரை பொங்கலை இந்த அளவுகளுடன் செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
Sakkarai Pongal Recipe: பொங்கல் பண்டிகை வரப்போகிறது. அனைவரும் பொங்கல் வைக்க தேவையான பொருட்களை வாங்கி, நல்ல சுவையான பொங்கலை வைப்பது எப்படி என்று இணையத்தில் தேடிக் கொண்டிருப்பார்கள். அதுவும் தற்போது பானையில் பொங்கல் வைப்போரை விட குக்கரில் பொங்கல் வைப்பவர்கள் தான் அதிகம். நீங்களும் அப்படி குக்கரில் தான் பொங்கல் வைக்கப் போகிறீர்களா? அதுவும் பர்பெக்ட்டான பதத்தில் சர்க்கரை பொங்கலை வைக்க வேண்டுமா?
அப்படியானால் இக்கட்டுரை உங்களுக்கானது. ஏனெனில் இங்கு கோவிலில் கொடுக்கப்படும் சர்க்கரை பொங்கலுக்கு இணையான சுவையைத் தரும் பொங்கலை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு கொடுக்கப்பட்டுள்ள அளவுகளின் படி பொங்கலை வைத்தால், சுவை மிகவும் பிரமாதமாக இருக்கும். முக்கியமாக வேகமாக பொங்கல் காலியாகிவிடும்.

உங்களுக்கு குக்கரில் சர்க்கரை பொங்கலை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சர்க்கரை பொங்கல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சரிசி - 2 டம்ளர்
* பாசிப்பருப்பு - 1 டம்ளர்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 9 டம்ளர்
* பால் - 1 டம்ளர்
வெல்லம் கரைப்பதற்கு...
* பொடித்த வெல்லம் - 4 டம்ளர்
* தண்ணீர் - 1 டம்ளர்
வறுப்பதற்கு...
* நெய் - 4 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 15 முந்திரி (தேவையான அளவு)
* உலர் திராட்சை - 15
* ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் 2 டம்ளர் பச்சரிசியை நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின்
அதில் நீரை ஊற்றி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு 1 டம்ளர் பாசிப்பருப்பை எடுத்து, நீரில் 2 முறை கழுவிக்
கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய்
ஊற்றி சூடானதும், பாசிப்பருப்பை சேர்த்து மிதமான தீயில் வைத்து, நல்ல
மணம் வரும் வரை வறுக்க வேண்டும்.
* பின் அதில் பச்சரிசியை கழுவி, நீரை முற்றிலும் வடிகட்டிவிட்டு,
சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுக்க வேண்டும்.
* பின்னர் அதில் 9 டம்ளர் நீரை ஊற்றி, பின் அதில் 1 டம்ளர் பாலை ஊற்றி
கலந்து, குக்கரை மூடி 7 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, நன்கு கரண்டியால் கிளறி விட
வேண்டும்.
* அடுத்து ஒரு பாத்திரத்தில் 4 டம்ளர் வெல்லத்தை சேர்த்து, அத்துடன் 1
டம்ளர் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, வெல்லத்தை கரைத்து இறக்கிக்
கொள்ள வேண்டும்.
* பின் அந்த வெல்ல நீரை குக்கரில் வடிகட்டி ஊற்றி, குக்கரை மீண்டும்
அடுப்பில் வைத்து, குறைவான தீயில் வைத்து, நன்கு 10 நிமிடம் கிளறி
விட்டு இறக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 4 டேபிள் ஸ்பூன் நெய்
ஊற்றி சூடானதும், முந்திரியை சேர்த்து மிதமான தீயில் வைத்து வறுத்து,
பின் உலர் திராட்சையை சேர்த்து கிளறி, திராட்சை உப்பி வந்ததும், அதை
இறக்கி, குக்கரில் உள்ள பொங்கலுடன் சேர்த்து, அத்துடன் 1 டீஸ்பூன்
ஏலக்காய் பொடியையும் சேர்த்து நன்கு கிளறினால், சுவையான சர்க்கரை
பொங்கல் தயார்.



Click it and Unblock the Notifications