Latest Updates
-
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்..
1 கப் கடலைமாவு இருந்தா இந்த மாதிரி சைவ ஆம்லெட்டை செஞ்சு சாப்பிடுங்க... முட்டை ஆம்லெட் மாதிரியே இருக்கும்...!
Saiva Omelette Recipe in Tamil: முட்டையை என்னதான் விதவிதமாக சமைத்து சாப்பிட்டாலும் சிலருக்கு என்னவோ ஆம்லெட்டாக சாப்பிட தான் பிடிக்கும். சிலருக்கு கடைகளில் என்ன சாப்பிட்டாலும் சைடிஷ் ஆக ஆம்லெட் சாப்பிடுவது வழக்கமாக இருக்கும். நாம் வீட்டில் குழந்தைகளுக்கும் முட்டை ஆரோக்கியமானது என்பதாலும், குழந்தைகளை சளி பிரச்சனைகளில் இருந்து விடுவிக்க உணவில் மிளகை சேர்க்க என்னும் போதும் ஆம்லெட்டில் சேர்த்து கொடுப்பது எளிதாக இருக்கும்.
காலையில் எப்பவும் இட்லி, தோசை செய்து போரடித்தவிட்டதா? ஆம் எனில் சற்று வித்தியாசமான சுவையைக் கொண்ட ஒரு அருமையான டிபனை செய்ய நினைக்கிறீர்களா? 1 கப் கடலை மாவும், கால் கப் மைதாவும் இருந்தா இந்த சைவ ஆம்லெட்டை செய்யுங்க. ஆம்லெட் சுவையிலேயே இருக்கும் இது முழுக்க முழுக்க சைவமாகும். ஆம்லெட் சாப்பிட விரும்பும் சைவ உணவுப்பிரியர்கள் இந்த கடலை மாவும் ஆம்லெட்டை தாராளமாக சாப்பிடலாம். மேலும் இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.

உங்களுக்கு சைவ ஆம்லெட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சைவ ஆம்லெட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் கடலை மாவு
- ¼ கப் மைதா மாவு
- ½ டீஸ்பூன் உப்பு
- ½ டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
- தேவையான அளவு தண்ணீர்
- 1 பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கியது
- ½ தக்காளி, பொடியாக நறுக்கியது
- 2 பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது
- 2 டேபிள்ஸ்பூன் கொத்தமல்லி, பொடியாக நறுக்கியது
- எண்ணெய் தேவையான அளவு
- 1 ஸ்பூன் வெண்ணெய்
- 1 ஸ்பூன் மிளகுத்தூள்
செய்முறை:
- முதலில், ஒரு பெரிய பாத்திரத்தில் 1 கப் கடலை மாவு, ¼ கப் மைதா மாவு, ½ டீஸ்பூன் உப்பு, ½ டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 டீஸ்பூன் பேக்கிங் பவுடர் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும்.
- தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கட்டிகள் இல்லாத மென்மையான மாவை தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
- மாவு தோசை மாவு பதத்தில் ஊற்றும் பதத்தில் இருக்க, தண்ணீரின் அளவை பதத்திற்கு ஏற்ப சரிசெய்து கொள்ளவும்.
- பின்னர் மாவில் நறுக்கிய பெரிய வெங்காயம், ½ தக்காளி, 2 பச்சை மிளகாய் மற்றும் 2 டேபிள்ஸ்பூன் கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலக்கவும்.
- இப்போது, தோசைக்கல்லை சூடாக்கி, எண்ணெயை தடவவும்.
- ஒரு கரண்டி மாவை ஊற்றி, ஆம்லெட் போல தோசைக்கல் முழுவதும் சீராகப் பரப்பவும்.
- மிளகுத்தூள் தூவி, ஓரங்களிலும் நடுவிலும் வெண்ணெய் சேர்க்கவும்.
- ஆம்லெட் எல்லாப் பக்கங்களிலும் வேகும் வரை மிதமான தீயில் வேக வைக்கவும்.
- மறுபுறம் திருப்பிப் போட்டு இருபுறமும் நன்றாக வேக வைக்கவும்.
- அவ்வளவுதான் சுவையான சைவ ஆம்லெட் ரெடி!



Click it and Unblock the Notifications