Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ!
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. ஒரே மாதத்தில் 3 கிலோ வரை உடல் எடை குறையுமாம்..
Saamai Vegetable Kanji Recipe In Tamil: நீங்கள் குண்டா இருக்கீங்களா? உங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதற்காக டயட்டிலும் இருக்கிறீர்களா? அப்படியானால் காலை வேளையில் சிறுதானியங்களை அதிகம் உணவில் சேர்த்து வாருங்கள். சிறுதானியங்களில் உடலுக்கு வேண்டிய சத்துக்களைக் கொண்டவை. மேலும் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவி புரிபவை.
சிறுதானியங்களில் நிறைய உள்ளன. அதில் ஒன்று தான் சாமை அரிசி. இந்த சாமை அரிசியைக் கொண்டு பல ரெசிபிக்களை செய்யலாம். இருப்பினும் அதைக் கொண்டு காய்கறிகளை சேர்த்து கஞ்சி செய்யும் போது, சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும். இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடித்து வந்தால், உடல் எடையில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம். அந்த அளவில் இது மிகவும் பயனுள்ள ஒரு கஞ்சி.

உங்களுக்கு சாமை வெஜிடேபிள் கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சாமை வெஜிடேபிள் கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சாமை அரிசி - 1/2 கப்
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 5 பல்
* பச்சை மிளகாய் - 1 (கீறியது)
* சின்ன வெங்காயம் - 8 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பீன்ஸ் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 6 கப்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் சாமை அரிசியை 1/2 கப் எடுத்து நீரில்,
2-3 முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் அரிசி மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, 1/2 மணிநேரம் ஊற
வைக்க வேண்டும்.
* அடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், 1/2 டீஸ்பூன் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் 5 பூண்டு பற்கள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* பின் அதில் கறிவேப்பிலை சேர்த்து வெங்காயத்தை கண்ணாடி பதத்திற்கு
வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய பீன்ஸ் மற்றும் கேரட்டை சேர்த்து,
சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.
* காய்கறிகள் ஓரளவு வெந்ததும், அதில் ஊற வைத்துள்ள சாமை அரிசியை
சேர்த்து கிளறி, 6 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு
கொதிக்க வைக்க வேண்டும்.
* கஞ்சி கொதிக்க ஆரம்பித்ததும், மூடி வைத்து 4-5 நிமிடம் மீண்டும்
கஞ்சியை கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான மற்றும் சத்தான சாமை
வெஜிடேபிள் கஞ்சி தயார்.



Click it and Unblock the Notifications
