Latest Updates
-
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்
சப்பாத்தி, பூரிக்கு ஒரே மாதிரி குருமா வைக்காம இந்த ரோட்டுக்கடை சால்னாவை செய்யுங்க...டேஸ்ட் தாறுமாறா இருக்கும்!
Rottukadai Veg Salna Recipe in Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் தோசை, சப்பாத்தி, பூரி செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? ஆனால் உங்கள் வீட்டில் காய்கறி எதுவும் இல்லையா? அப்படியானால் ரோட்டுக்கடை ஸ்டைல் சைவ சால்னாவை செய்யுங்கள். இது சைவ குருமானு சத்தியம் பண்ணி சொன்னா கூட நம்ப மாட்டாங்க. அப்படி இருக்கும்.
இந்த ரோட்டுக்கடை சைவ சால்னா சப்பாத்தி, பூரிக்கு மட்டுமின்றி, இட்லி, தோசை, பரோட்டா போன்றவற்றுடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த சால்னா மாலை நேரத்தில் வேகமாக செய்யக்கூடிய வகையில், மிகவும் எளிமையாக இருக்கும்.

உங்களுக்கு ரோட்டுக்கடை சைவ சால்னாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரோட்டுக்கடை சைவசால்னா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மசாலா அரைக்க:
- 1 பிரியாணி இலை
- 1 பட்டை
- 2 துண்டு இஞ்சி
- 5 பல் பூண்டு
- 1 ஸ்பூன் மல்லி
- ½ ஸ்பூன் சீரகம்
- 10 சின்ன வெங்காயம்
- 1 ஸ்பூன் மிளகு
- ½ கப் துருவிய தேங்காய்
- 1 ஸ்பூன் சோம்பு
- 1 ஸ்பூன் கசகசா
- 5 முந்திரி
- வேர்க்கடலை - 2 ஸ்பூன்
சால்னா செய்ய:
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 2 பட்டை
- 3 கிராம்பு
- 3 ஏலக்காய்
- 1 ஸ்பூன் சோம்பு
- 1 பச்சை மிளகய்
- 2 பெரிய வெங்காயம் நறுக்கியது
- 1 கொத்து கருபே்பிலை
- 2 தக்காளி நறுக்கியது
- ¼ ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 ஸ்பூன் மிளகாய் தூள்
- புதினா இலை சிறிது
- 1 ஸ்பூன் கரம் மசாலா
- உப்பு தேவையான அளவு
- தண்ணீர் தேவையான அளவு
- கொத்தமல்லி சிறிதளவு
செய்முறை:
- முதலில் சால்னா செய்வதற்கு தேவையான மசாலா அரைக்க ஒரு மிக்ஸி ஜாரில் பிரியாணி இலை, பட்டை, இஞ்சி, பூண்டு, மல்லி, மிளகு, சீரகம் மற்றும் சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து மென்மையான விழுதாக அரைத்து கொண்டு ஒரு கிண்ணத்தில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- பின்பு அதே மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், சீரகம், கசகசா, வறுத்த வேர்க்கடலை, முந்திரி பருப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்து இதையும் தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
- பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, போன்ற பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.
- பின் இதனுடன் பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கி கொள்ளவும்.
- வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கி வந்தவுடன் இதனுடன் நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
- பின் தக்காளி நன்கு மசிந்து வந்ததும் இதனுடன் மிளகாய் தூள் சேர்த்து கிளறி விடவும். பின் மசாலா வாசனை போனா பின் நம் முதலில் அரைத்து வைத்த வெங்காய பேஸ்ட் மற்றும் சிறிது புதினா இலைகளை சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்கு வதக்கிக் கொள்ளுங்கள்.
- பின் மசாலா பச்சை வாசனை போனதும் நாம் அரைத்த தேங்காய் பேஸ்ட் மற்றும் 1 ஸ்பூன் கரம் மசாலா மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, பின் உப்பு சரிபார்த்து கடாயை மூடி வைத்து ஒரு ஐந்து நிமிடங்கள் கொதிக்க வையுங்கள்.
- நன்றாக கொதித்து கிரேவி பதத்திற்கு வந்ததும் கொஞ்சம் கொத்தமல்லி தூவி இறக்கினால் சூப்பரான ரோட்டுக்கடை சால்னா ரெடி!



Click it and Unblock the Notifications