Latest Updates
-
இந்திய ராணுவத்தில் எவ்வளவு பெண்கள் உள்ளார்கள்? எந்த நாட்டு இராணுவத்தில் அதிக பெண்கள் இருக்கிறார்கள் தெரியுமா? -
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
தினமும் வீட்டில் கற்பூரத்துடன் பிரியாணி இலை சேர்த்து எரிங்க.. அப்புறம் நடக்குறத பாருங்க.. ஆச்சரியப்படுவீங்க.. -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த நெல்லை ஸ்டைல் கொத்சை ட்ரை பண்ணுங்க - அட்டகாசமா இருக்கும்
ரோட்டுக்கடை முட்டை சேர்வா ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும்
Rottukadai Muttai Serva Recipe in Tamil: சப்பாத்தி, பூரிக்கு எப்பவும் ஒரே மாதிரி சைடிஷ் செய்யாம புதுசா ஏதாவது சூப்பரான சைடிஷ் செய்ய ஆசைப்படுறீங்களா? என்னதான் பெரிய பெரிய ஹோட்டல்களில் சாப்பிட்டாலும் ரோட்டு கடைகளில் தோசை, புரோட்டாவுக்கு ஊற்றும் சேர்வாவின் சுவைக்கு ஈடாகாது. இந்த ரோட்டுக்கடை சேர்வா இட்லி, தோசை, புரோட்டா, சப்பாத்தி என அனைத்திற்கும் அட்டகாசமாக இருக்கும். அதிலும் இதில் முட்டையை சேர்த்து சேர்வா வைத்தால் சொல்லவே வேண்டாம். வழக்கமாக சாப்பிடுவதை விட வீட்டில் எல்லோரும் அதிகமாக சாப்பிடுவார்கள். இந்த ரோட்டுக்கடை முட்டை சேர்வா சுவையானது மட்டுமின்றி செய்வதற்கும் மிகவும் எளிதானது.

உங்களுக்கு ரோட்டுடக்கடை முட்டை சேர்வாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரோட்டுக்கடை முட்டை சேர்வா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 3 ஸ்பூன் நல்லெண்ணெய்
- 1/2 அங்குல துண்டு பட்டை
- 1/4 ஸ்பூன் சோம்பு
- 1/4 ஸ்பூன் சீரகம்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1/2 கப் வெங்காயம், பொடியாக நறுக்கியது
- 1 ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது
- 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 3/4 ஸ்பூன் மிளகாய் தூள்
- 1.5 ஸ்பூன் மல்லித் தூள்
- 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள்
- 1/2 கப் தக்காளி, நறுக்கியது
- தேவையான அளவு உப்பு
- 1/2 ஸ்பூன் சர்க்கரை
- தேவையான அளவு தண்ணீர்
- 4 வேகவைத்த முட்டை
- 2 ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி இலை
மசாலா விழுது அரைக்க:
- 1/4 கப் துருவிய புதிய தேங்காய்
- 15 முந்திரிப் பருப்புகள்
- 1 ஸ்பூன் கசகசா
- 2 ஸ்பூன் கடலை மாவு
- 2 பச்சை மிளகாய்
- 1 ஏலக்காய்
- 2 கிராம்பு
- 1 அங்குல துண்டு பட்டை
- 1/2 ஸ்பூன் சோம்பு
- சிறிதளவு கல்பாசி
- 1/2 கப் தண்ணீர்
செய்முறை:
- முதலில் ஒரு மிக்சி ஜாரில் மசால் அரைக்கத் தேவையான அனைத்துப் பொருட்களையும் சேர்த்து மென்மையான விழுதாக அரைக்கவும்.
- முட்டையை வேகவைத்து தோல் உரித்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு அடி கனமான வாணலியைச் சூடாக்கி, அதில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் பட்டை, சோம்பு, சீரகம், கிராம்பு மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- வாசனை வரும் வரை மசாலாப் பொருட்களை எண்ணெயில் வதக்கவும். பிறகு, பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து, அவை மென்மையாகும் வரை வதக்கவும்.
- பின்னர் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் கறி மசாலாத் தூள் ஆகியவற்றைச் சேர்த்து மிதமான தீயில் சில நொடிகள் வதக்கவும்.
- மசாலா பச்சை வாசனை போனதும் நறுக்கிய தக்காளி மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். பின்னர் சிறிதளவு சர்க்கரையை சேர்த்து கிளறவும்.
- வாணலியை மூடி வைத்து, தக்காளி நன்கு குழைந்து வரும் வரை சுமார் 3-4 நிமிடங்கள் குறைந்த தீயில் சமைக்கவும்.
- தக்காளி நன்கு குழைந்ததும் தயார் செய்த மசாலா விழுதைச் சேர்த்து கிளறவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடம் கொதிக்க விடவும்.
- இறுதியாக, வேகவைத்த முட்டைகளைச் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு அதன் மேல் தாராளமாக மல்லித் தழையைத் தூவி இறக்கவும்.
- அவ்வளவுதான் சுவையான ரோட்டுக்கடை முட்டை சேர்வா ரெடி. இதை இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி அல்லது புரோட்டாவுடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications