Latest Updates
-
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க..
1 கப் ரவையும், தயிரும் இருந்தா 10 நிமிசத்தில் இந்த ஈஸியான ஊத்தாப்பம் செய்யுங்க... டேஸ்ட் தாறுமாறா இருக்கும்...
Rava Uthappam Recipe in Tamil: உங்கள் வீட்டில் காலையில் டிபன் செய்ய இட்லி, தோசை மாவு எதுவும் இல்லையா? உப்புமா செய்யலாம் என்றால், வீட்டில் உள்ளவர்களுக்கு பிடிக்காதா? உங்கள் வீட்டில் 1 கப் ரவையும், கொஞ்சம் தயிரும், சில காய்கறிகளும் உள்ளதா? அப்படியானால், அவற்றைக் கொண்டு அட்டகாசமான சுவையில் ரவா ஊத்தாப்பத்தை செய்து கொடுங்கள்.
இந்த ரவா ஊத்தாப்பம் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, செய்வதற்கு மிகவும் ஈஸியாகவும் இருக்கும். அதோடு, இந்த ரவா ஊத்தாப்பத்திற்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி போன்றவை சூப்பரான காம்பினேஷனாக இருக்கும். ஒருமுறை இந்த ரவா ஊத்தாப்பத்தை வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால், பின் அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள்.

உங்களுக்கு ரவா ஊத்தாப்பத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரவா ஊத்தாப்பத்தின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் ரவை
- 1 கப் புளித்த தயிர்
- 2 பெரிய வெங்காயம்
- 2 தக்காளி
- 2 கேரட்
- 1 குடை மிளகாய்
- 1 பச்சை மிளகாய்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- ஒரு கைப்பிடி கொத்தமல்லி
செய்முறை:
- முதலில் பெரிய வெங்காயம், தக்காளி, கேரட், குடை மிளகாய், பச்சை மிளகாய், மற்றும் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் ஒரு கப் அளவு ரவையை கொட்டி அதில் அரை ஸ்பூன் உப்பு மற்றும் ஒரு கப் அளவு புளித்த தயிரை அதில் ஊற்றி நன்கு கலக்கி கொள்ளவும்.
- ரவையும் தயிரும் ஒன்றாக சேர்ந்து கெட்டியானதும் அதில் 2 அல்லது 3 மேஜைக்கரண்டி அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி சுமார் 10 லிருந்து 15 நிமிடம் வரை அதை அப்படியே ஊற வைக்கவும்.
- 10 நிமிடத்திற்கு பிறகு எடுத்து பார்த்தால் மாவு நன்கு ஊறி கெட்டியாக இருக்கும். பின்னர் அதில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மாவை தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
- மாவை சரியான பதத்திற்கு தண்ணீர் ஊற்றி கலக்கிய பின் சுமார் ஒரு 5 நிமிடம் வரை அதை ஊற விடவும்.
- பின்னர் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
- தோசைக்கல் சுட்டதும் அதில் ஒரு கரண்டி அளவு மாவை எடுத்து தோசை ஊற்றுவதை விட சிறிதளவு மொத்தமாக ஊற்றி அதை சுற்றி ஒரு ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றவும்.
- பின்பு அதன் மேலே நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், தக்காளி, கேரட், குடை மிளகாய், பச்சை மிளகாய், மற்றும் கொத்தமல்லியை தூவி விட்டு கரண்டியின் மூலம் மெதுவாக அழுத்தி விடவும்.
- ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு மெதுவாக அதன் மேலே கரண்டியை வைத்து அழுத்தி விடவும். அப்பொழுது தான் காய்கறிகளும் நன்கு வெந்து ஊத்தாப்பதோடு சேர்ந்து வரும்.
- இரு புறமும் நன்கு வெந்ததும் ஊத்தாப்பத்தை ஒரு தட்டிற்கு மாற்றி தேங்காய் சட்னியோடு அல்லது தக்காளி சட்னியோடு பரிமாறினால் காலை டிபன் அட்டகாசமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications