Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
இட்லி, தோசைக்கு மாவு இல்லையா? 1 கப் சேமியா இருந்தா இப்படி பணியாரம் செய்யுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்...
Rava Semiya Paniyaram Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் பெரும்பாலும் இட்லி, தோசை தான் சாப்பிடுவீர்களா? ஆனால் வீட்டில் இட்லி, தோசைக்கு மாவு தீர்ந்துவிட்டதா? உங்கள் வீட்டில் சேமியா உள்ளதா? அப்படியானால் அந்த சேமியாவுடன் ரவையை சேர்த்து அட்டகாசமான சுவையில் குழிப்பணியாரம் சுடுங்கள்.
இந்த பணியாரம் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும். முக்கியமாக இந்த பணியாரத்தை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

உங்களுக்கு ரவா சேமியா பணியாரத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரவா சேமியா பணியாரம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சேமியா - 1 கப்
* ரவை - 3/4 கப்
* புளித்த தயிர் - 3/4 கப்
* தண்ணீர் - 3/4 கப்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* பெருங்காயத் தூள் - சிறிது
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (துருவியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1/2 டம்ளர்
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சேமியாவை சேர்த்து
நன்கு வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் ரவையை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து
இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
* பின் அதில் புளித்த தயிரை ஊற்றி, அத்துடன் 3/4 கப் நீரை ஊற்றி நன்கு
கலந்து, மூடி வைத்து 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் கடலைப்பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயத்
தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்னர் துருவிய கேரட்டை சேர்த்து, நிறம் மாறும் வரை வதக்கி இறக்கி,
அதை ஊறிய ரவையுடன் சேர்க்க வேண்டும்.
* பின் அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, பொடியாக நறுக்கிய
கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியைத தூவி, 1/2 டம்ளர் நீரை ஊற்றி நன்கு
கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும்,
குழிகளில் எண்ணெய் ஊற்றி, கலந்து வைத்துள்ள மாவை குழிகளில் கொஞ்சம்
கொஞ்சமாக ஊற்றி, முன்னும், பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால்,
சுவையான ரவை சேமியா பணியாரம் தயார்.



Click it and Unblock the Notifications