Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
வீட்டுல இட்லி, தோசை மாவு இல்லையா? 1 கப் ரவை இருந்தா.. இப்படி பன் தோசை செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்...
Rava Masala Bun Dosa Recipe In Tamil: உங்கள் வீட்டில் காலையில் டிபன் செய்ய இட்லி, தோசை மாவு எதுவும் இல்லையா? உப்புமா செய்யலாம் என்றால், வீட்டில் உள்ளவர்கள் ஓடிவிடுவார்களா? உங்கள் வீட்டில் 1 கப் ரவையும், சிறிது காய்கறிகளும் உள்ளதா? அப்படியானால், அவற்றைக் கொண்டு அட்டகாசமான சுவையில் ரவா மசாலா பன் தோசையை செய்து கொடுங்கள்.
இந்த பன் தோசை செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, செய்வதற்கு மிகவும் ஈஸியாகவும் இருக்கும். அதோடு, இந்த பன் தோசைக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி போன்றவை சரியான காம்பினேஷனாக இருக்கும். ஒருமுறை இந்த பன் தோசையை வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால், பின் அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள்.

உங்களுக்கு ரவா மசாலா பன் தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரவா மசாலா பன் தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ரவை - 1 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* கோதுமை மாவு - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* கேரட் - 1 (துருவியது)
* சிறிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* சிறிய உருளைக்கிழங்கு - 1 (துருவியது)
* கொத்தமல்லி - சிறிது
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* எண்ணெய் - தேவையான அளவு
மேலே தூவுவதற்கு...
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* குழம்பு மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் ரவையை எடுத்து, அதில் ரவை மூழ்கும்
அளவில் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 1/2 மணிநேரம் ஊற வைக்க
வேண்டும்.
* 1/2 மணிநேரம் கழித்து, ரவையை நன்கு கரண்டியால் கிளறி விட்டு, அதில்
கோதுமை மாவை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்க்க வேண்டும்.
* பின் அதில் தோசை மாவு பதத்திற்கு தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு
கட்டிகளின்றி கலந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் துருவிய தேங்காய், துருவிய கேரட், பொடியாக நறுக்கிய
தக்காளி மற்றும் வெங்காயத்தை சேர்க்க வேண்டும்.
* அடுத்து அதில் துருவிய உருளைக்கிழங்கை சேர்த்து, பின் பொடியாக
நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் மிளகாய் தூள், சீரகத் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு
கிளறி விட்டு, 5 நிமிடம் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு கிண்ணத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயம், குழம்பு மிளகாய்
தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை 1 கரண்டி ஊற்றி, அதன்
மேல் கலந்து வைத்துள்ள வெங்காயத்தை மேலே தூவி, குறைவான தீயில் வைத்து
மூடி வைத்து, சிறிது நேரம் வேக வைக்க வேண்டும்.
* பின் அதை பிரட்டி போட்டு சிறிது நேரம் வேக வைக்க வேண்டும். இப்படி
பொன்னிறமாகி நன்கு வேகும் வரை பிரட்டி போட்டு வேக வைத்து எடுத்தால்,
சுவையான ரவா மசாலா பன் தோசை தயார்.



Click it and Unblock the Notifications