Latest Updates
-
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்!
1 கப் ரவையும், 1/2 கப் துருவிய தேங்காயும் வெச்சு... காலையில இப்படியொரு டிபனை செய்யுங்க.. செமயா இருக்கும்...
Rava Dosa With Kara Chutney Recipe: உங்கள் வீட்டில் தோசை சுட மாவு இல்லையா? வீட்டில் இருப்பவர்கள் தோசை வேண்டுமென்று கேட்கிறார்களா? வீட்டில் ரவையும், தேங்காயும் உள்ளதா? அப்படியானால் அந்த இரண்டையும் கொண்டு அட்டகாசமான சுவையில் தோசை சுடுங்கள்.
இந்த தோசை பஞ்சு போன்று மென்மையாக இருக்கும். அதுவும் இந்த தோசைக்கு கார சட்னி சரியான சைடு டிஷ்ஷாக இருக்கும். முக்கியமாக இந்த இரண்டும் வேகமாக செய்யக்கூடிய வகையில் செய்வதற்கு ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு ரவா தோசையும், கார சட்னியையும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரவா தோசை மற்றும் கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
தோசைக்கு...
* ரவை - 1 கப்
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* சோடா உப்பு - 1 சிட்டிகை
* எண்ணெய் - தேவையான அளவு
சட்னிக்கு...
* பெரிய வெங்காயம் - 2
* தக்காளி - 1
* பூண்டு - 7 பல்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* கல் உப்பு - 1/4 டீஸ்பூன்
* புளி - சிறிய துண்டு
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் ரவை, தேங்காய், உப்பு மற்றும் தேவையான
அளவு நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்ததை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் சிறிது நீரை ஊற்றி
கலந்து, மூடி வைத்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதற்குள் சட்னியை செய்யலாம். அந்த சட்னிக்கு மிக்சர் ஜாரில்
வெங்காயம், தக்காளி, பூண்டு, மிளகாய் தூள், உப்பு மற்றும் புளி
சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பிறகு அதில் அரைத்த சட்னியை சேர்த்து, பச்சை வாசனை போக 5 நிமிடம்
நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான கார சட்னி தயார்.
* அடுத்து ஊற வைத்துள்ள மாவுடன், சோடா உப்பு சேர்த்து நன்கு கலந்து
கொள்ள வேண்டும்.
* இறுதியாக தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து
வைத்துள்ள மாவை தோசையாக ஊற்றி, மேலே எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும்
வேக வைத்து எடுத்தால், சுவையான தேங்காய் ரவா தோசை ரெடி.



Click it and Unblock the Notifications