Latest Updates
-
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்!
ரம்ஜான் ஸ்பெஷல்: பெங்காலி ஸ்டைல் சிக்கன் ரெசலா
ரம்ஜான் பண்டிகையன்று வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்ய நினைத்தால், பெங்காலி ஸ்டைல் சிக்கன் ரெசலா செய்யுங்கள். சிக்கன் ரெசலா என்பது சிக்கன் குருமா.
ரம்ஜான் பண்டிகை வரப்போகிறது. ரம்ஜான் பண்டிகை என்றாலே பலருக்கும் நினைவிற்கு வருவது, பிரியாணி தான். அதோடு அந்நாளில் பல வித்தியாசமான சுவையான ரெசிபிக்களையும் சிலர் முயற்சிப்பார்கள். அப்படி நீங்களும் ரம்ஜான் பண்டிகையன்று வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்ய நினைத்தால், பெங்காலி ஸ்டைல் சிக்கன் ரெசலா செய்யுங்கள். சிக்கன் ரெசலா என்பது சிக்கன் குருமா. இந்த குருமா சப்பாத்தி, நாண் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.

உங்களுக்கு பெங்காலி ஸ்டைல் சிக்கன் ரெசலா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பெங்காலி ஸ்டைல் சிக்கன் ரெசலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கியது)
* முந்திரி - 10
* கசகசா - 2 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* பிரியாணி இலை - 2
* கிராம்பு - 4
* ஏலக்காய் - 2
* பட்டை - 1 இன்ச்
* வரமிளகாய் - 4
* கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கடுகு எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சிக்கன் - 1 கிலோ
* தயிர் - 1 கப்
* சர்க்கரை - 1 டீஸ்பூன்
* குங்குமப்பூ - சிறிது (அலங்கரிப்பதற்கு)
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் வெங்காயம், இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து நன்கு அரைத்து, தனியாக ஒரு பௌலில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த மிக்சர் ஜாரை கழுவி விட்டு, அதில் முந்திரி, கசகசா சேர்த்து நீர் ஊற்றி நன்கு மேன்மையாக அரைத்து, அதையும் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு சிக்கனை நன்கு கழுவி, ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் அரைத்த பாதி வெங்காய விழுது மற்றும் பாதி முந்திரி விழுதை சேர்த்து, தயிர், தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு டீஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து நன்கு பிரட்டி, குறைந்தது 1 மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் எஞ்சிய வெங்காய விழுதை சேர்த்து சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.
* பின்பு அத்துடன் மீதமுள்ள முந்திரி விழுதை சேர்த்து ஒருமுறை கிளறி விட வேண்டும்.
* இறுதியாக ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து, கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து குறைவான தீயில் 25 நிமிடம் சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும்.
* பின்பு மூடியைத் திறந்து, அதில் சர்க்கரையை சேர்த்து கிளறி, உப்பு சுவை பார்த்து தேவைப்பட்டால் உப்பு சேர்த்து கிளறி இறக்கி, மேலே குங்குமப்பூவைத் தூவினால், சுவையான பெங்காலி ஸ்டைல் சிக்கன் ரெசலா தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications