Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
ரமலான் ஸ்பெஷல்: மட்டன் வெள்ளை குருமா
இன்று உங்கள் வீட்டில் மட்டன் எடுத்திருந்தால், அதைக் கொண்டு ஒரு வித்தியாசமான ரெசிபியை முயற்சிக்க நினைத்தால், மட்டன் வெள்ளை குருமாவை முயற்சிக்கலாம்.
விடுமுறை நாட்களில் அசைவ உணவை வீட்டில் சமைத்து அவசரமின்றி பொறுமையாக ருசித்து சாப்பிடுவதே தனி சுகம் என்று கூறலாம். அதுவும் உங்களுக்கு வித்தியாசமான ரெசிபிக்களை முயற்சிப்பது பிடிக்குமானால், அதை முயற்சித்து சுவைப்பது இன்னும் அற்புதமான அனுபவத்தைத் தரும். இன்று உங்கள் வீட்டில் மட்டன் எடுத்திருந்தால், அதைக் கொண்டு ஒரு வித்தியாசமான ரெசிபியை முயற்சிக்க நினைத்தால், மட்டன் வெள்ளை குருமாவை முயற்சிக்கலாம். இந்த குருமா சாதத்துடன் மட்டுமின்றி, இட்லி, தோவை, ஆப்பம், இடியாப்பம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.

அதுவும் தற்போது ரமலான் நோன்பு நோற்பவர்கள், இந்த ரெசிபியை செய்து மாலையில் சாப்பிடலாம். உங்களுக்கு மட்டன் வெள்ளை குருமா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மட்டன் வெள்ளை குருமாவின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* மட்டன் - 1/2 கிலோ
* தயிர் - 1/4 கப்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
குருமாவிற்கு...
* நெய் - 3 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* ஏலக்காய் - 4
* கிராம்பு - 3
* பட்டை - 1 சிறிய துண்டு
* தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1 (நீளமாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 5-6
* கறிவேப்பிலை - ஒரு கையளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* கசகசா - 1 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 10
செய்முறை:
* முதலில் மட்டனை நன்கு நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அந்த மட்டனுடன் 'ஊற வைப்பதற்கு' கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பிரட்டி 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி உருகியதும், மசாலாப் பொருட்கள் அனைத்தையும் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் தயிர் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து மென்மையாகும் வரை வதக்கவும்.
* பின் கறிவேப்பிலை சேர்த்து கிளறி, ஊற வைத்துள்ள மட்டனை சேர்த்து 5-10 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தேவையான அளவு நீரை ஊற்றி 6-8 விசில் விட்டு மட்டனை நன்கு வேக வைத்து இறக்கிக் கொள்ளவும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, குறைவான தீயில் 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான மட்டன் வெள்ளை குருமா தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications