Latest Updates
-
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்..
ரமலான் ஸ்பெஷல்: கேரளா மட்டன் மசாலா
உங்களுக்கு வாய்க்கு சுவையாக அதே சமயம் சற்று வித்தியாசமான ரெசிபி செய்து சாப்பிட வேண்டுமென்று தோன்றினால், கேரளா மட்டன் மசாலா செய்து சாப்பிடுங்கள். இது சப்பாத்தி மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.
ரமலான் நோன்பு இருப்பவர்கள், மாலை வேளை நோன்பு முடித்த பின்பு நல்ல புரோட்டீன் நிறைந்த உணவுகளை உண்பது மிகவும் நல்லது. அதில் பெரும்பாலானோர் அசைவ உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்பர். உங்களுக்கு வாய்க்கு சுவையாக அதே சமயம் சற்று வித்தியாசமான ரெசிபி செய்து சாப்பிட வேண்டுமென்று தோன்றினால், கேரளா மட்டன் மசாலா செய்து சாப்பிடுங்கள். இது சப்பாத்தி மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு கேரளா மட்டன் மசாலா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரளா மட்டன் மசாலாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
MOST READ: ருசியான... சிக்கன் சாப்ஸ்
தேவையான பொருட்கள்:
* மட்டன் - 500 கிராம்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மசாலாவிற்கு...
* தேங்காய் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 2 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 6 பல் (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் மட்டனை நன்கு நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரில் கழுவிய மட்டன் துண்டுகளைப் போட்டு அடுப்பில் வைத்து, அத்துடன் மிளகுத் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் ஒரு கப் நீரை ஊற்றி, குக்கரை மூட வேண்டும். ஒரு விசில் வந்ததும் நெருப்பை குறைத்து, குறைவான தீயில் 30 நிமிடம் வேக வைக்க வேண்டும். 30 நிமிடம் கழித்ததும், அடுப்பில் இருந்து குக்கரை இறக்க வேண்டும். விசில் போனதும் குக்கரை திறக்க வேண்டும்.
* அடுத்து ஒரு பௌலில் மட்டன் துண்டுகளை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் உள்ள எஞ்சிய நீரை ஒரு பௌலில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தைப் போட்டு 3-4 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் சோம்பு, இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்னர் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.
* மசாலாவில் இருந்து பச்சை வாசனை போனதும், தக்காளியைப் போட்டு நன்கு மென்மையாகும் வரை குறைந்தது 2-3 நிமிடம் வதக்கவும்.
* அதன் பின் தனியாக வைத்துள்ள மட்டன் நீர் மற்றும் மட்டனை சேர்த்து, வேண்டுமானால் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும். நீரானது ஓரளவு வற்றியதும், அடுப்பை அணைத்து இறக்கினால், சுவையான கேரளா மட்டன் மசாலா தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications