Latest Updates
-
குடிமகன் ஒவ்வொருவரும் 9 கோடி சம்பாதிக்கும் உலகின் பணக்கார நாடு எது தெரியுமா? அமெரிக்கா இல்லை -
செப்டம்பர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்வில் பிரகாசத்தை கொண்டு வரப்போகுது! -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கை இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அற்புதங்கள் நிகழப்போகுதாம் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்!
ருசியான... சிக்கன் சாப்ஸ்
சிக்கனைக் கொண்டு பல்வேறு ருசியான உணவுகள் உலகில் தயாரிக்கப்படுகின்றன. அதில் ஒன்று தான் சிக்கன் சாப்ஸ். இந்த சிக்கன் சாப்ஸ் ஒரு அற்புதமான ஸ்டாட்டர்ஸ்.
சிக்கனைக் கொண்டு பல்வேறு ருசியான உணவுகள் உலகில் தயாரிக்கப்படுகின்றன. அதில் ஒன்று தான் சிக்கன் சாப்ஸ். இந்த சிக்கன் சாப்ஸ் ஒரு அற்புதமான ஸ்டாட்டர்ஸ். அதோடு இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும். நீங்கள் கடைகளில் சிக்கன் சாப்ஸ் வாங்கி சுவைத்திருப்பீர்கள். ஆனால் அந்த சிக்கன் சாப்ஸ் ரெசிபியை உங்கள் வீட்டிலேயே செய்தால், எவ்வளவு வேண்டுமானாலும் நீங்கள் செய்து சாப்பிடலாம் அல்லவா?

ஆகவே தமிழ் போல்ட்ஸ்கை சிக்கன் சாப்ஸ் ரெசிபியை வீட்டிலேயே எப்படி செய்வதென்று கொடுத்துள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் கொத்துக்கறி - 300 கிராம்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* முட்டை - 1
* இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* புதினா இலைகள் - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
* பிரட் தூள் - சிறிது
செய்முறை:
* ஒரு பௌலில் சிக்கன் கொத்துக்கறியை நன்கு கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், முட்டை, இஞ்சி பூண்டு விழுது, கொத்தமல்லி, புதினா, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை ஃப்ரிட்ஜில் வைத்து 15 நிமிடம் ஊற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், சிக்கன் கலவையை சிறு சிறு உருண்டைகளாக அல்லது உங்களுக்கு வேண்டிய வடிவில் உருட்டி, பின் அதை பிரட் தூளில் பிரட்டி எடுத்து, எண்ணெயில் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்தையும் பொரித்து எடுத்தால், சுவையான சிக்கன் சாப்ஸ் தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications