Latest Updates
-
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..
சப்பாத்திக்கு டக்கரா இருக்கும் ராஜஸ்தான் ஸ்டைல் நெல்லிக்காய் சட்னி ரெசிபி..ட்ரை பண்ணுங்க..சூப்பராக இருக்கும்!
Rajasthan Nellikai Chutney Recipe in Tamil: நம் உடலுக்கு தேவையான பெரும்பாலான சத்துக்கள் நமக்கு உணவு மூலம் மட்டுமே கிடைக்கிறது. எனவே நாம் சாப்பிடும் உணவுகளில் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது என்பது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானதாகும்.
ஒவ்வொரு நாளும் காலையில் இட்லி, தோசைக்கு என்ன சட்னி செய்வதென்று யோசித்து முடிவெடுப்பதே ஒரு பெரிய வேலையாக உள்ளதா? எப்போதும் ஒரே சட்னியை செய்து கொடுப்பதால், வீட்டில் உள்ளவர்கள் சரியாக சாப்பிடுவதில்லையா? அப்படியானால் புதுவகையான அதேசமயம் ஆரோக்கியமான சட்னி செய்ய விரும்புகிறீர்களா?

அப்படியானால் இந்த ராஜஸ்தான் ஸ்டைல் நெல்லிக்காய் சட்னியை முயற்சி செய்து பாருங்கள். நெல்லிக்காய் சட்னி என்பது ஒரு எளிய மற்றும் ஆரோக்கியமான சட்னியாகும், இது இட்லி ,தோசைக்கு மட்டுமின்றி சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் சிறந்த சைடிஷாக இருக்கும். குறிப்பாக இதில் இனிப்பு சுவை அதிகமாக இருப்பதால் குழந்தைகள் இதை விரும்பி சாப்பிடுவார்கள்.
உங்களுக்கு ராஜஸ்தான் ஸ்டைல் நெல்லிக்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராஜஸ்தான் ஸ்டைல் நெல்லிக்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- நெல்லிக்காய் - ¼ கிலோ
- சர்க்கரை - 1 கப்
தாளிக்க:
- கடுகு எண்ணெய் - 1 டீ ஸ்பூன்
- துருவிய இஞ்சி - ¼ டீ ஸ்பூன்
- வெந்தயம் - ½ டீ ஸ்பூன்
- கருஞ்சீரகம் - ¼ டீ ஸ்பூன்
- சீரகம் - ¼ டீ ஸ்பூன்
- கடுகு - ½ டீ ஸ்பூன்
- சோம்பு - ½ டீ ஸ்பூன்
- மஞ்சள்த்தூள் - ¼ டீ ஸ்பூன்
- சிவப்பு மிளகாய் தூள் - ¼ டீ ஸ்பூன்
வறுத்து அரைக்க:
- கடுகு - 1 டீ ஸ்பூன்
- சோம்பு - 1 டீ ஸ்பூன்
- வெந்தயம் - ½ டீ ஸ்பூன்
- சிவப்பு வர மிளகாய் - 5 மிளகாய்
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர்- தேவையான அளவு
செய்முறை:
- நெல்லிக்காய்களை சுத்தமாக கழுவி அதன் மேல் பரப்பில் மெலிதாக கீரல்கள் போட்டு எடுத்துக் கொள்ளவும்.
- அதை குக்கரில் சேர்த்து மஞ்சள் தூள், கல் உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்.
- குக்கர் பிரஷர் அடங்கியதும் ஆற வைத்து அதில் இருக்கும் விதைகளை நீக்கிக் கொள்ளவும். மீதமிருக்கும் தண்ணீரை தனியாக எடுத்து வைக்கவும்.
- விதை நீக்கிய நெல்லிக்காய்களை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி தனியே வைத்துக் கொள்ளவும்.
- இஞ்சியை மண் இல்லாமல் கழுவி தோலை நீக்கி விட்டு நன்றாக துருவி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் கடுகு, சோம்பு, வெந்தயம், சிவப்பு வரமிளகாய், மற்றும் உப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
- நன்றாக ஆறியதும் அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் பொடியாக அரைத்து தனியே வைக்கவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து காய விடவும். - - அதனுடன் கடுகு சேர்த்து நன்றாக பொரிந்ததும், வெந்தயம், கருஞ்சீரகம், சோம்பு, மற்றும் சீரகம் தாளிக்கவும்.
- அதில் தோல் நீக்கி துருவி வைத்த இஞ்சியையும் சேர்த்து நன்கு மணம் வரும் வரை வதக்கவும்.
- அதனுடன் தனியாக முடித்து எடுத்து வைத்த நெல்லிக்காய்களை சேர்த்து வதக்கவும். அதில் மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
- மஞ்சள் மற்றும் மிளகாய் தூள் பச்சை வாசனை போனதும், அதனுடன் சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறவும்.
- நெல்லிக்காய் வேக வைத்த மீத நீரை இதனுடன் சேர்த்து நன்றாக வேக விடவும்.
- இந்த கலவை நன்கு கெட்டியாகும் வரை வேக வைத்து அதனுடன் அரைத்து வைத்த மசாலா பொருட்களை 1 டீ ஸ்பூன் அளவிற்கு சேர்த்து நன்கு கிளறவும்.
- இதனுடன் தேவைப்பட்டால் வருத்தம் முந்திரி மற்றும் உலர்ந்த திராட்சையை சேர்த்துக் கொள்ளலாம்.
- இது சாதம் மற்றும் சப்பாத்தி என அனைத்திற்கும் ஏற்ற சைட் டிஷாக இருக்கும்.
- உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் அல்லது கருப்பட்டி கூட சேர்த்துக் கொள்ளலாம்.
- இதை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதோடு அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications











