Latest Updates
-
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை
ராகியை வெச்சு எப்பவும் கூழ் செய்யாம.. ஒரு டைம் இப்படி தோசை செஞ்சு சாப்பிட்டு பாருங்க..
Ragi Rava Dosa Recipe In Tamil: காலையில் எப்போதும் ஒரே மாதிரி தான் தோசை சுட்டு சாப்பிடுவீர்களா? இப்படி ஒரே மாதிரி வெறும் தோசையை சுட்டு சாப்பிடுவதற்கு பதிலாக, வீட்டில் ராகி மாவு இருந்தால், அதைக் கொண்டு தோசை சுடுங்கள். இதுவரை ராகி மாவை கொண்டு கூழ் தான் செய்து சாப்பிட்டிருப்பீர்கள்.
ஆனால் அதைக் கொண்டு ரவா தோசை சுட்டு சாப்பிடும் போது, ருசியாக இருப்பதோடு, ஆரோக்கியமானதும் கூட. அதுவும் ராகி மாவைக் கொண்டு தோசை செய்து தக்காளி சட்னியுடன் சேர்த்து சாப்பிடும் போது ருசி இன்னும் அட்டகாகமாச இருக்கும்.

உங்களுக்கு ராகி ரவா தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராகி ரவா தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ராகி மாவு - 1 கப்
* அரிசி மாவு - 1/4 கப்
* ரவை - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, அரிசி மாவு, ரவை மற்றும்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி கட்டிகளின்றி
தோசை மாவு பதத்திற்கு கலந்து, மூடி வைத்து 15 நிமிடம் ஊற வைக்க
வேண்டும்.
* 15 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் சீரகம், பொடியாக
நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும்
வெங்காயத்தை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* மாவு மிகவும் கெட்டியாக இருந்தால், நீரை ஊற்றி நன்கு ரவா தோசை
பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு நாண்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து, அதில் கலந்து
வைத்துள்ள மாவை அள்ளி ஊற்றி, எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து
மொறுமொறுவென்று வேக வைத்து எடுத்தால், சுவையான ராகி ரவா தோசை
தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications