Latest Updates
-
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..
1 கப் ராகி மாவை வெச்சு.. காலையில் 10 நிமிஷத்துல இப்படி தோசை சுடுங்க.. ரவா தோசையே தோத்துப்போயிடும்...
Ragi Dosa In Tamil: காலையில் எப்போதும் ஒரே மாதிரியான இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று ஆரோக்கியமான, அதே சமயம் சுவையான காலை டிபனை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் வீட்டில் ராகி மாவு இருந்தால், அதைக் கொண்டு ஆரோக்கியமான முறையில் ஒரு மொறுமொறுப்பான தோசை சுட்டு சாப்பிடுங்கள்.
இந்த ராகி தோசையின் ஸ்பெஷலே, இதற்கு எண்ணெய் பயன்படுத்த தேவையில்லை என்பது தான். ஒரு துளி கூட எண்ணெய் சேர்க்காமல், மொறுமொறுவென்று சூப்பரான தோசை சுடலாம். இப்படி தோசை சுட்டால், ரவா தோசையே தோற்றுப்போயிடும். அந்த அளவில் இது சுவையாக இருக்கும். இந்த ராகி தோசைக்கு தேங்காய் சட்னி, கார சட்னி என எந்தவிதமான சட்னியும் பொருத்தமாக இருக்கும்.

உங்களுக்கு ராகி தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராகி தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ராகி மாவு - 1 கப்
* தண்ணீர் - 2 கப் + தேவையான அளவு
* கேரட் - 1 (துருவியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* சீரகம் - 1 டீஸ்பூன்
* இஞ்சி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் அதில் 2 கப் நீரை ஊற்றி, கட்டிகளின்றி நன்கு கலந்து கொள்ள
வேண்டும்.
* பின்பு அதில் துருவிய கேரட்டை சேர்த்து , பின் அதில் பொடியாக
நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி
ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* பிறகு அதில் சீரகம் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, கெட்டியாக
இருந்தால், இன்னும் சிறிது நீரை ஊற்றி நன்கு கலந்து கொள்ள
வேண்டும்.
* இறுதியாக தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து
வைத்துள்ள ராகி கலவையை ஒரு கரண்டி எடுத்து கல்லில் அள்ளி ஊற்றி, மூடி
வைத்து வேக வைத்து, பின் மடித்து எடுத்தால், மொறுமொறுப்பான ராகி தோசை
தயார்.



Click it and Unblock the Notifications









