Latest Updates
-
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா?
1 கப் ராகி மாவு வெச்சு.. காலையில் இப்படி பன் தோசையும், சட்னியும் செஞ்சு சாப்பிட்டு பாருங்க.. சுவை அள்ளும்...
Ragi Bun Dosa Recipe In Tamil: காலையில் தோசை சுட மாவு தீர்ந்துவிட்டதா? வீட்டில் ராகி மாவு உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு அட்டகாசமான சுவையில் ஒரு பன் தோசையை செய்யுங்கள். இந்த பன் தோசை மென்மையாக பஞ்சு போன்று இருப்பதோடு, செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். முக்கியமாக இதை காலை உணவாக அல்லது இரவு உணவாக சாப்பிடலாம்.
உங்களுக்கு ராகி பன் தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராகி பன் தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
பன் தோசைக்கு...
* ராகி மாவு - 1 கப்
* ரவை - 1 கப்
* தயிர் - 1/2 கப்
* தண்ணீர் - 1 கப் + 3 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* ஆப்ப சோடா - 2 சிட்டிகை
வதக்குவதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (துருவியது)
* கொத்தமல்லி - சிறிது
சட்னிக்கு....
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* பூண்டு - 4 பல்
* கொத்தமல்லி - சிறிது
* தேங்காய் - 1/4 மூடி
* வறுத்த வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் ராகி மாவை எடுத்து, அத்துடன் ரவை, தயிர்
மற்றும் 1 கப் நீரை ஊற்றி நன்கு கட்டிகளின்றி கலந்து, மூடி வைத்து
15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதற்குள் சட்னியை செய்யலாம். அதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து,
அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பச்சை மிளகாயை உடைத்து
சேர்த்து, அத்துடன் ழுண்டு, கொத்தமல்லியை சேர்த்து நன்கு வதக்கி
இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு அதை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் தேங்காய், வேர்க்கடலை,
சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து
தாளித்து சட்னியுடன் சேர்த்து கிளறினால், சட்னி தயார்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட்,
கொத்தமல்லியை சேர்த்து, சிறிது உப்பு தூவி 2 நிமிடம் வதக்கி இறக்கிக்
கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் ஊற வைத்துள்ளதை சேர்த்து, அதை நன்கு
மென்மையாக அரைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 3 டேபிள் ஸ்பூன் நீரை ஊற்றி கலந்து, வதக்கிய வெங்காய
கேரட் கலவையை சேர்த்து நன்கு கலந்து, அத்துடன் சுவைக்கேற்ப உப்பு
மற்றும் ஆப்ப சோடாவை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தாளிப்பு கரண்டியை எடுத்து அடுப்பில் வைத்து, அதில்
சிறிது எண்ணெய் ஊற்றி, கலந்து வைத்துள்ள மாவை ஊற்றி மூடி வைத்து 4
நிமிடம் வேக வைத்து, பின் அதை திருப்பிப் போட்டு வேக வைத்து
எடுத்தால், சுவையான ராகி பன் தோசை தயார். இந்த பன் தோசைக்கு அந்த
வேர்க்கடலை சட்னி அருமையான காம்பினேஷனாக இருக்கும்.
Image Courtesy: kurinji. com



Click it and Unblock the Notifications









