Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
1 கைப்பிடி புதினாவும், 1 கப் கோதுமை மாவும் வெச்சு.. ஒருடைம் இப்படி தோசை சுடுங்க.. மொறுமொறுன்னு செமயா இருக்கும்
Mint Dosa Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி தோசை சுடுவீர்களா? ஆனால் உங்கள் வீட்டில் காலையில் தோசை சுட மாவு இல்லையா? அப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்கள் வீட்டில் புதினாவும், கோதுமை மாவும் இருந்தால், அதைக் கொண்டு அருமையான சுவையில் தோசை சுடுங்கள்.
இந்த புதினா தோசை ரவா தோசை போன்றே நன்கு மொறுமொறுவென்று அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த புதினா தோசையை ஒருமுறை வீட்டில் செய்தால், உங்கள் வீட்டில் உள்ளோர் அடிக்கடி செய்து கொடுக்க கேட்பார்கள். அந்த அளவில் அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். இந்த புதினா தோசைக்கு தேங்காய் சட்னி பக்காவான சைடு டிஷ்ஷாக இருக்கும்.

உங்களுக்கு புதினா தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே புதினா தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* புதினா - 1 கைப்பிடி
* கொத்தமல்லி - சிறிது
* பச்சை மிளகாய் - 4
* இஞ்சி - 1 இன்ச்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* கோதுமை மாவு - 1 கப்
* சில்லி ப்ளேக்ஸ் - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய்,
இஞ்சி, சீரகம், உப்பு மற்றும் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் 1 கப் கோதுமை மாவை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ள புதினா கலவையை ஊற்றி, தோசை மாவு
பதத்திற்கு தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் சில்லி ப்ளேக்ஸை சேர்த்து நன்கு கலந்து கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு நாண்ஸ்டிக் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல்
சூடானதும், அதில் கலந்து வைத்துள்ள மாவை ஒரு கரண்டி எடுத்து தோசையாக
ஊற்றி, மேலே எண்ணெய் ஊற்றி, 2 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து,
அப்படியே மடித்து எடுத்தால், சுவையான புதினா தோசை தயார்.



Click it and Unblock the Notifications