Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
புடலங்காயை இந்த மாதிரி மசாலா சேர்த்து பொரியல் பண்ணுங்க... எடையும் குறையும்... சுவையும் தாறுமாறா இருக்கும்...!
Pudalangai Poriyal Recipe in Tamil: உங்கள் வீட்டில் மதியம் சாப்பாட்டுக்கு தினமும் பொரியல் செய்வீர்களா? சில காய்கறிகளில் பொரியல் செய்தால் வேண்டாம் என்பார்களா? முக்கியமாக புடலங்காய் என்றால் வேண்டாம் என்று கூறுவார்களா? அப்படிப்பட்டவர்களை புடலங்காய் சாப்பிட வைக்க வேண்டுமா?
அப்படியானால் அந்த புடலங்காயைக் கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள பக்குவத்தில் பொரியல் செய்து கொடுங்கள். இப்படி புடலங்காய் பொரியலை செய்து கொடுத்தால் புடலங்காய் பிடிக்காதவர்கள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். இந்த புடலங்காயை பொரியலை பேச்சுலர்கள் கூட செய்து சாப்பிடலாம். அந்த அளவில் செய்வதற்கு ஈஸியாக இருக்கும். அதே சமயம் சுவையாகவும் இருக்கும். உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் நிச்சயம் இந்த புடலங்காய் பொரியலை சாப்பிட வேண்டும்.

உங்களுக்கு சுவையான மற்றும் ஆரோக்கியமான புடலங்காய் பொரியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே புடலங்காய் பொரியலின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- புடலங்காய் - அரை கிலோ
- நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப்
- கடுகு - அரை டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன்
- கடலைப் பருப்பு - 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- கறிவேப்பிலை - 1 கொத்து
- எண்ணெய் - தேவையான அளவு
அரைக்க:
- பச்சைமிளகாய் - 3
- பூண்டு பல் - 2
- சோம்பு - அரை டீஸ்பூன்
- சீரகம் - அரை டீஸ்பூன்
- தேங்காய் - அரை கப்
செய்முறை:
- முதலில் அரைக்க கொடுத்துள்ளப் பொருட்களை தண்ணீர் விடாமல் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- புடலங்காயை விதைகளை நீக்கி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி காயவைத்து, அதில் கடுகைப் போட்டு தாளிக்கவும்.
- கடுகு பொரிந்ததும் உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு போட்டு தாளித்து, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய புடலங்காய், தேவையான உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கிளறிவிட்டு, கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து மூடி வைத்து வேகவைக்கவும்.
- புடலங்காய் வெந்ததும், அரைத்த கலவையைச் சேர்த்து நன்றாக கலந்து விடவும். காயிலுள்ள தண்ணீர் வற்றி, மசாலாவின் வாசனை இல்லாதபோது பொரியலை அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
- அவ்வளவுதான் சூப்பரான புடலங்காய் பொரியல் ரெடி.
- இது சாம்பார் சாதம், ரசம் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications