Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
உடலுக்கு வலுசேர்க்கும் புரோட்டீன் தோசை.. எப்படி செய்றது-ன்னு தெரியுமா?
Moong Dal Dosa Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் தோசை பிரியர்களா? இதனால் தினமும் ஒரு வேளையாவது உங்கள் வீட்டில் தோசை செய்வீர்களா? ஆனால் ஒரே மாதிரி தோசை செய்து சற்று போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான அதே சமயம் சத்தான தோசை உங்கள் வீட்டில் உள்ளோரக்கு செய்து கொடுக்க நினைக்கிறீர்களா?
அப்படியானால் ஒருமுறை புரோட்டீன் தோசை செய்து கொடுங்கள். புரோட்டீன் தோசை என்பது வேறொன்றும் இல்லை பாசிப்பருப்பு தோசை தான். பாசிப்பருப்பில் புரோட்டீன் அதிகம் இருப்பதால், குழந்தைகளுக்கு இந்த தோசையை செய்து கொடுப்பது நல்லது. இதனால் உடல் வலுபெறும். மேலும் இந்த தோசை செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு புரோட்டீன் தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே புரோட்டீன் தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாசிப்பருப்பு - 1 கப்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
* இஞ்சி - 1 இன்ச்
* சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 கப்
செய்முறை:
* முதலில் பாசிப்பருப்பை கழுவி, குறைந்தது ஒரு 8 மணிநேரம் ஊற
வைத்துக் கொள்ள வேண்டும்.
* 8 மணிநேரம் கழித்து, அந்த பாசிப்பருப்பை மிக்சர் ஜாரில் போட்டு,
அத்துடன் கறிவேப்பிலை, வரமிளகாய், இஞ்சி, சீரகம் மற்றும் சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* மாவு மிகவும் கெட்டியாக இருந்தால், தோசை மாவு பதத்திற்கு சிறிது
நீரை ஊற்றி, அத்துடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும்
பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து
வைத்துள்ள மாவை தோசையாக ஊற்றினால், சுவையான பாசிப்பருப்பு தோசை தயார்.
இந்த தோசையை புரோட்டீன் தோசை என்றும் அழைக்கலாம்.



Click it and Unblock the Notifications