Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
2 உருளைக்கிழங்கு இருந்தா.. சப்பாத்தி, பூரிக்கு இப்படி குருமா செய்யுங்க.. வழக்கத்தை விட அதிகமா சாப்பிடுவாங்க..
Potato Vellai Kurma Recipe In Tamil: உங்கள் வீட்டில் சப்பாத்தி, பூரி செய்யும் போது, பெரும்பாலும் உருளைக்கிழங்கு தான் சைடு டிஷ்ஷாக இருக்கும்? அதுவும் எப்போதும் ஒரே பக்குவத்தில் தான் உருளைக்கிழங்கை செய்வீர்களா? இப்படி ஒரே மாதிரி செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் அடுத்தமுறை உருளைக்கிழங்கை செய்வதாக இருந்தால், அதைக் கொண்டு வெள்ளை குருமா செய்யுங்கள்.
இந்த உருளைக்கிழங்கு வெள்ளை குருமா பூரி, சப்பாத்தியுடன் மட்டுமின்றி, இட்லி, தோசையுடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். மேலும் இந்த குருமாவை செய்தால் வீட்டில் உள்ளோர் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு உருளைக்கிழங்கு வெள்ளை குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு வெள்ளை குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* தேங்காய் - 1/2 கப்
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி - 1/2 இன்ச்
* பூண்டு - 3 பல்
* பச்சை மிளகாய் - 3
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* பட்டை - 1/2 இன்ச்
* கிராம்பு - 3
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1/2 இன்ச்
* கிராம்பு - 2
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* ஏலக்காய் - 2
* வெங்காயம் - 1 (மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* உருளைக்கிழங்கு - 2 (சற்று பெரிய துண்டுகளாக்கப்பட்டது)
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், பொட்டுக்கடலை, இஞ்சி,
பூண்டு, பச்சை மிளகாய், சோம்பு, பட்டை, கிராம்பு ஆகியவற்றை சேர்த்து,
சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் உருளைக்கிழங்கை எடுத்து, அதன் தோலை நீக்கிவிட்டு, சற்று
பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, சோம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து
கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
தூவி, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் உருளைக்கிழங்குகளை சேர்த்து நன்கு 3 நிமிடம் வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, குருமாவிற்கு
தேவையான அளவு நீரை ஊற்றி, உப்பு சுவை பார்த்து, கொத்தமல்லியைத் தூவி,
குக்கரை மூடி, 3-4 விசில் விட்டு இறக்கினால், சுவையான உருளைக்கிழங்கு
வெள்ளை குருமா தயார்.



Click it and Unblock the Notifications