Latest Updates
-
இன்றைய ராசிபலன் 14 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நரகத்தின் கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும் -
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
1 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா போதும்... காலையில் டேஸ்டியான டிபன் செய்யலாம்..
Potato Rava Roll Recipe In Tamil: காலையில் எப்போதும் இட்லி, தோசை செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான காலை உணவை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை மாவு எதுவும் இல்லையா? உங்கள் வீட்டில் ரவையும், உருளைக்கிழங்கும் இருந்தால், அவற்றைக் கொண்டு அருமையான காலை உணவை தயார் செய்யலாம். இந்த உருளைக்கிழங்கு ரவா ரோல் காலையில் சாப்பிட மட்டுமின்றி மாலை வேளையில் ஸ்நாக்ஸாகவும் அருமையாக இருக்கும்.
உங்களுக்கு உருளைக்கிழங்க ரவா ரோலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு ரவா ரோல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* தண்ணீர் - 1 1/2 கப்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* ரவை - 1 கப்
மசாலாவிற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* உருளைக்கிழங்கு - 1 (வேக வைத்து மசித்தது)
கோட்டிங்கிற்கு...
* கோதுமை மாவு - 2 டீஸ்பூன்
* உப்பு - 2 சிட்டிகை
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நீரை ஊற்றி,
அத்துடன் உப்பு மற்றும் எண்ணெய் ஊற்றி, நீர் நன்கு கொதிக்க
ஆரம்பித்ததும், ரவையை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* ரவையை நன்கு கட்டிகளின்றி கிளறிய பின், மிதமான தீயில் வைத்து, மூடி
வைத்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின்பு அடுப்பை அணைத்துவிட்டு, ரவையை ஒரு தட்டில் போட்டு குளிர
வைக்க வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வரும் வரை வதக்கிய பின், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம்
மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு வேக வைத்து மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு
கிளறி விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஆற வைத்த ரவையை கைகளால் நன்கு மென்மையாக சப்பாத்தி மாவு
பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். ஒருவேளை நீர் போதாமல் இருந்தால்,
லேசாக நீரைத் தெளித்து நன்கு கைகளால் பிசைந்து விட வேண்டும்.
* பின் பிசைந்த ரவையை ஒரு பாலிதீன் கவரில் எண்ணெய் தடவி வைத்து, ஓரளவு
தடிமனாக சப்பாத்தி போன்று தேய்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு நடுவே உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து பரப்பி, கைகளால் நன்கு
அழுத்திவிட்டு, பின் அதை இறுக்கமாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக உருட்டியதை துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் கத்தியால் அதை சிறு சிறு மெல்லிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள
வேண்டும்.
* கடைசியாக ஒரு பௌவில் கோதுமை மாவை எடுத்து, அத்துடன் 2 சிட்டிகை
உப்பு சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி சற்று நீர் போன்று
கலந்துகொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் 5 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி, துண்டுகுளாக்கப்பட்டதை ஒவ்வொன்றாக எடுத்து கோதுமை மாவில்
பிரட்டி, எண்ணெயில் போட்டு முன்னும், பின்னும் பொன்னிறமாக பொரித்து
எடுத்தால், சுவையான உருளைக்கிழங்கு ரவா ரோல் தயார்.
Image Courtesy: kurinji. com



Click it and Unblock the Notifications