Latest Updates
-
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்!
உருளைக்கிழங்கும், ரவையும் இருந்தா.. காலையில் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் அள்ளும்..
Potato Rava Keerai Roti Recipe In Tamil: காலையில் எப்போதும் இட்லி, தோசை செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான, அதே சமயம் வேகமாக செய்யக்கூடியவாறான டிபனை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உருளைக்கிழங்கும், ரவையும் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு ஒரு அருமையான சுவையில் ரொட்டி செய்து சாப்பிடுங்கள்.
அதுவும் உங்கள் வீட்டில் உள்ளோர் கீரையை உணவில் அதிகம் சேர்க்காமல் இருந்தால், இந்த ரொட்டியுடன் ஏதாவது ஒரு கீரையை சேர்த்து செய்யுங்கள். இதனால் இந்த ரொட்டி சுவையானது மட்டுமின்றி, சத்தானதும் கூட. ஒருமுறை இந்த ரொட்டியை செய்தால், பின் வீட்டில் உள்ளோர் வாரம் ஒருமுறை இந்த ரொட்டியை செய்யுமாறு கேட்பார்கள். ஏனெனில் அந்த அளவில் இந்த ரொட்டி ருசியாக இருக்கும். இந்த ரொட்டிக்கு தேங்காய் சட்னி சூப்பர் சைடு டிஷ்ஷாக இருக்கும்.

உங்களுக்கு உருளைக்கிழங்கு ரவா கீரை ரொட்டியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு ரவா கீரை ரொட்டி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பெரிய உருளைக்கிழங்கு - 1
* தண்ணீர் - 1 கப்
* உப்பு - சிறிது
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
* ரவை - 1/2 கப்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது
* முருங்கைக்கீரை - 1 கைப்பிடி
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, அதை துருவி நீரில்
போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 கப் நீரை ஊற்றி,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, துருவிய உருளைக்கிழங்கை சேர்த்து 2
நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின் அதில் சீரகத் தூள், கரம் மசாலா, மிளகாய் தூள் சேர்த்து கிளறி 1
நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் ரவையை சேர்த்து நன்கு கிளறி விட்டு 2 நிமிடம் வேக
வேண்டும்.
* நீர் ஓரளவு வற்றியதும், அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம்,
கொத்தமல்லியை சேர்த்து, அதோடு 1 கைப்பிடி முருங்கைக்கீரையை சேர்த்து
நன்கு 3-4 நிமிடம் கிளறி விட்டு வேக வைக்க வேண்டும்.
* நீரானது முழுமையாக வற்றியதும், அடுப்பை அணைத்துவிட்டு குளிர வைக்க
வேண்டும்.
* கலவை நன்கு குளிர்ந்த பின், அதிலிருந்து சிறிது எடுத்து உருட்டி,
ஒரு எண்ணெய் தடவிய கவரில் வைத்து, கையில் எண்ணெய் தடவி, சற்று
தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய்
ஊற்றி சூடானதும், தட்டி வைத்துள்ள ரொட்டியை சேர்த்து, முன்னும்,
பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், உருளைக்கிழங்கு ரவா கீரை
ரொட்டி தயார்.



Click it and Unblock the Notifications











