Latest Updates
-
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்.. -
ஜூன் 17-ல் உருவாகும் அரிய கிரக சேர்க்கையால் அற்புதமான நன்மைகளை அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
கோவை அன்னபூர்ணா ஹோட்டல் வெஜ் குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
இனிப்புகளின் ராஜா என்று அழைக்கப்படும் இனிப்பு எது தெரியுமா? உங்களுக்கு இந்த இனிப்பு பிடிக்குமா? -
எந்த கீரை வாங்கினாலும் இப்படி ஒருவாட்டி செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஜூலை 27-ல் நடக்கும் சனி வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கனவு நனவாகப்போகுது..! -
இந்த 4 மாதங்களில் பிறந்த பெண்கள் மிகச்சிறந்த அம்மாக்களாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன? -
முதலைகள் ஏன் கற்களை விரும்பி சாப்பிடுகின்றன தெரியுமா? இதுக்குப் பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா?
1 முட்டையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா... காலையில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட...
Potato Omelette Recipe In Tamil: காலையில் தினமும் இட்லி, தோசை, சப்பாத்தி, உப்புமா என்று ஒரே மாதிரியான டிபனை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான அதே சமயம் ருசியான மற்றும் சத்தான காலை உணவை சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் 1 முட்டையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தால், அவற்றைக் கொண்டு ஒரு புதுமையான காலை உணவை செய்யுங்கள்.
இந்த உருளைக்கிழங்கு ஆம்லெட் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முட்டை, உருளைக்கிழங்கு ஆகிய இரண்டுமே குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுப் பொருள். எனவே இவற்றைக் கொண்டு ஆம்லெட் செய்து காலை உணவாக சாப்பிடும் போது வயிறும் நிறையும், சுவையாகவும் இருக்கும்.

உங்களுக்கு உருளைக்கிழங்கு ஆம்லெட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு ஆம்லெட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பெரிய உருளைக்கிழங்கு - 1
* முட்டை - 1
* மைதா - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 2 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - சிறிது
செய்முறை:
* முதலில் உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, நீளவாக்கில்
மெலிதாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு கிண்ணத்தில் நறுக்கிய உருளைக்கிழங்கை போட்டு, அத்துடன் 1
முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் 2 டேபிள் ஸ்பூன் மைதா மாவு மற்றும் சுவைக்கேற்ப உப்பு
சேர்க்க வேண்டும்.
* பிறகு அதில் 2 டேபிள் ஸ்பூன் நீரை ஊற்றி நன்கு கிளறி விட
வேண்டும்.
* அடுத்து ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி தவா
முழுவதும் தடவி விட வேண்டும்,
* இறுதியாக அதில் கலந்து வைத்துள்ள கலவையை ஊற்றி பரப்பி விட்டு, மூடி
வைத்து, குறைவான தீயில் வைத்து 2 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின் திருப்பிப் போட்டு மூடி வைத்து, 2 நிமிடம் வேக வைத்து
எடுத்தால், சுவையான உருளைக்கிழங்கு ஆம்லெட் தயார்.



Click it and Unblock the Notifications