Latest Updates
-
Avani 2026 Rasipalan: ஆவணி மாதம் இந்த 3 ராசிக்கு தொழில் ரீதியா அதிர்ஷ்டமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
கேரட்டும், ஜவ்வரிசியும் இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட் செய்யுங்க.. பிள்ளைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
Nag Panchami 2026: நாக பஞ்சமியில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
காரசாரமான சிக்கன் ஈரல் வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
இந்த 7 அறிகுறிகள் அடிக்கடி தெரியுதா? அப்ப அது குடல்வால் புற்றுநோயின் அறிகுறியா இருக்கலாம்.. உஷார்.. -
ஆகஸ்ட் 19-ல் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..! -
கவுண்டம்பாளையம் சிக்கன் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. இட்லி, சாதத்துக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 16 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு மனச்சுமை அதிகரிக்கப்போகுதாம் -
புதன்-குருபகவான் இணைப்பால் சூப்பர் ஸ்டாரா ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கோவா ஸ்டைல் சிக்கன் மசாலா ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும்
ஒருடைம் கோதுமை தோசையுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் செமயா இருக்கும்..
Potato Gothumai Dosa Recipe In Tamil: காலையில் தினமும் ஒரே மாதிரி இட்லி, தோசை செய்து போடித்துவிட்டதா? வீட்டில் தோசை சுட மாவு இல்லையா? அப்படியானால் தோசை மாவு இல்லாத சமயத்தில் பலரது வீடுகளில் கோதுமை தோசை சுடும் பழக்கம் இருக்கும். உங்கள் வீட்டிலும் அப்படியான பழக்கம் உள்ளதா?
ஆனால் நீங்கள் இந்த கோதுமை தோசையை சற்று வித்தியாசமான சுவையில் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் கோதுமை மாவுடன் உருளைக்கிழங்கை துருவிப் போட்டு தோசை சுடுங்கள். இந்த தோசை செம ருசியாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.

உங்களுக்கு உருளைக்கிழங்கு கோதுமை தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு கோதுமை தோசையின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பெரிய உருளைக்கிழங்கு - 2
* கோதுமை மாவு - 2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்துக் கொள்ள
வேண்டும்.
* பின் வேக வைத்த உருளைக்கிழங்கை துருவிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் துருவிய உருளைக்கிழங்கு, கோதுமை மாவு,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி தோசை மாவு
பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு,
கொத்தமல்லி சேர்த்து, அத்துடன் மிளகாய் தூளையும் சேர்த்து நன்கு
கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல்லை சூடேற்ற வேண்டும்.
* தோசைக்கல் சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை ஒரு கரண்டி எடுத்து,
தோசையாக சுற்றி, மேலே எண்ணெய் ஊற்றி, மிதமான தீயில் வைத்து, முன்னும்
பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான உருளைக்கிழங்கு
கோதுமை தோசை தயார்.
Image Courtesy: Rajjo's Kitchen



Click it and Unblock the Notifications