Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
அரை கப் வேர்க்கடலை இருந்தா இப்படி பொடி அரைச்சு வேர்க்கடலை சாதம் செய்யுங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்...!
Peanut Rice Recipe in Tamil: உங்களுக்கு காலை வேளையில் இட்லி, தோசை சாப்பிட்டு அலுத்துவிட்டதா? வாய்க்கு ருசியாக அதே சமயம் சற்று வித்தியாசமான சுவையில் காலை உணவை சாப்பிட வேண்டுமா? அப்படியானால் இந்த சூப்பரான வேர்க்கடலை சாதம் செய்து சாப்பிடுங்கள். இது மிகவும் சுவையாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுமாறும் இருக்கும். அதோடு இது மிகவும் சத்தானதும் கூட.
குழந்தைகளுக்கு மதியம் லன்ச் பாக்ஸ்க்கு என்ன சமைத்துக் கொடுப்பது என்று குழம்புகிறவர்கள் இந்த கர்நாடகா ஸ்டைல் வேர்க்கடலை சாதத்தை தாராளமாக செய்யலாம். இந்த வேர்க்கடலை சாதம் செய்வதற்கு மிகவும் எளிதானது மற்றும் சுவையானதும் கூட.

உங்களுக்கு கர்நாடகா ஸ்டைல் வேர்க்கடலை சாதம் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கர்நாடகா வேர்க்கடலை சாதத்தின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மசாலா பொடி அரைக்க:
- 3 டேபிள்ஸ்பூன் வேர்க்கடலை
- 2 டீஸ்பூன் கடலைப்பருப்பு
- 2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
- 2 டேபிள்ஸ்பூன் எள்
- ½ டீஸ்பூன் சீரகம்
- 1 டீஸ்பூன் கொத்தமல்லி விதைகள்
- 5 வர மிளகாய்
- 2 டேபிள் ஸ்பூன் தேங்காய்
சாதத்திற்கு:
- 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
- 2 டேபிள்ஸ்பூன் வேர்க்கடலை
- 1 டீஸ்பூன் கடுகு
- ½ டீஸ்பூன் சீரகம்
- 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
- ½ டீஸ்பூன் கடலைப்பருப்பு
- ஒரு சிட்டிகை பெருங்காயம்
- 2 வர மிளகாய்
- சிறிது கறிவேப்பிலை
- ½ டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 2 டேபிள்ஸ்பூன் முந்திரி
- 4 கப் சமைத்த சாதம்
- தேவையான அளவு உப்பு
- 2 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி, பொடியாக நறுக்கியது
- 2 டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு
செய்முறை:
- முதலில், ஒரு கடாயில், 3 டேபிள் ஸ்பூன் வேர்க்கடலையை மிதமான தீயில் மொறுமொறுப்பாகும் வரை வறுக்கவும்.
- பின்னர் 2 டீஸ்பூன் கடலைப்பருப்பு, 2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு, 2 டேபிள்ஸ்பூன் எள், ½ டீஸ்பூன் சீரகம், 1 டீஸ்பூன் கொத்தமல்லி விதைகள் சேர்த்து, மசாலாப் பொருட்கள் வாசனை வரும் வரை வறுக்கவும்.
- பின்னர் 5 வர மிளகாய், 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் சேர்த்து தொடர்ந்து வறுக்கவும்.
- இந்த கலவையை ஆறவைத்து, மென்மையான தூளாக அரைத்து அதை தனியாக வைக்கவும்.
- ஒரு கடாயில், 2 டேபிள்ஸ்பூன் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, 2 டேபிள்ஸ்பூன் வேர்க்கடலையை வறுக்கவும்.
- பின் 1 டீஸ்பூன் கடுகு, ½ டீஸ்பூன் சீரகம், 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு, ½ டீஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு சிட்டிகை பெருங்காயம், 2 வர மிளகாய் மற்றும் ஒரு கொத்து கறிவேப்பிலையை சேர்க்கவும்.
- ½ டீஸ்பூன் மஞ்சள் தூள், 2 டேபிள்ஸ்பூன் முந்திரி சேர்த்து லேசாக வதக்கவும்.
- இப்போது 4 கப் சமைத்த சாதம், தயாரித்த மசாலா தூள், தேவையான அளவு உப்பு சேர்க்கவும். அனைத்து மசாலாக்களும் நன்கு கலக்கும்படி நன்றாக கலக்கவும்.
- இறுதியாக 2 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி மற்றும் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து சாதம் உடையாமல் மென்மையாக கிளறவும்.
- அவ்வளவுதான் சுவையான வேர்க்கடலை சாதம் ரெடி!



Click it and Unblock the Notifications