Latest Updates
-
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்!
1 கப் பட்டாணி இருந்தா 10 நிமிஷத்தில் இந்த ஈஸியான குருமாவை செய்யுங்க... சப்பாத்தி, பூரிக்கு தாறுமாறா இருக்கும்!
Pattani kurma recipe in Tamil: இன்று இரவு வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அந்த சப்பாத்தி, பூரிக்கு என்ன சைடிஷ் செய்யலாம் என்று யோசனை செய்து கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பச்சை பட்டாணி உள்ளதா? அப்படியானால் அந்த பச்சை பட்டாணியைக் கொண்டு சூப்பரான பச்சை பட்டாணி கிரேவியை செய்யலாம். இந்த பட்டாணி குருமா சப்பாத்தி, பூரிக்கு மட்டுமின்றி தோசை மற்றும் சாதத்துடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும். அனைத்திற்கும் மேல் இந்த கிரேவி செய்வது மிகவும் சுலபம்.
பட்டாணி புரோட்டின் நிறைந்ததாக இருப்பதால் இது உடலைக் குறைக்க விரும்புபவர்களுக்கும் ஏற்றதாக இருக்கும். இந்த பட்டாணி கிரேவி பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை விரும்பி சாப்பிடும் படி அருமையான சுவையில் இருக்கும். குறிப்பாக இந்த பட்டாணி கிரேவி சப்பாத்திக்கு மட்டுமின்றி பூரியுடன் சேர்த்து சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். பேச்சுலர்களும் இந்த ரெசிபியை முயற்சிக்கலாம்.

உங்களுக்கு ஈஸியான பச்சை பட்டாணி கிரேவி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சுவையான பச்சை பட்டாணி கிரேவியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- பச்சை பட்டாணி - 100 கிராம்
- சின்ன வெங்காயம் - 15
- தக்காளி - 2
- கறிவேப்பிலை - 1 கொத்து
- சீரகம் - 1 டீஸ்பூன்
- சாம்பார் தூள் - 1 ஸ்பூன்
- தேங்காய் துருவல் - அரை கப்
தாளிக்க:
- எண்ணெய் - தேவையான அளவு
- கடுகு - கால் டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
- வெங்காயம் - 10
- கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
- முதலில் பட்டாணியை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
- பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்ததும் தக்காளி போட்டு வதக்கவும். தக்காளி நன்கு குலையும் வரை வதக்கவும்.
- பின் சாம்பார் தூள் போட்டு கொஞ்சம் எண்ணெய் ஊற்றி 1 நிமிடம் வதக்கவும்.
- நன்றாக வதக்கிய பின் தேங்காய் துருவலை சேர்க்க வேண்டும். நன்கு ஆறியபின் இதனை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
- கடாயில் எண்ணெயை ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.
- கடுகு பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் ஊறவைத்த பட்டாணியையும் சேர்த்து 3 நிமிடம் சேர்த்து வதக்கவும்.
- பின் அரைத்த மசாலாவை கடாயில் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து 5 நிமிடம் வேகவைத்து இறக்கினால் சுவையான பட்டாணி கிரேவி ரெடி.
- இந்த பட்டாணி குழம்பு சப்பாத்தி, பூரி மட்டுமின்றி சாதத்தில் ஊற்றி சாப்பிடவும் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications