Latest Updates
-
Aippasi Horoscope 2026: ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்டக்கதவை திறக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
காளான் வாங்குனா இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன்கள் (அக்டோபர் 18-24) - இந்த வாரம் 4 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் -
கர்நாடகா மட்டன் சாறு ரெசிபி - இந்த மாதிரி மட்டன் குழம்பு வைச்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
100 ஆண்டுகளாக சிக்கன் மற்றும் முட்டை சாப்பிடாத வினோத கிராமம் - ஆனா மட்டன் சாப்பிடுவாங்க - காரணம் என்ன தெரியுமா -
18 ஆண்டுக்கு பின் கேது துலாம் ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு கெட்ட நேரம் தொடங்கப்போகுதாம் -
மும்பை ஸ்டைல் சன்னா மசாலா புலாவ் ரெசிபி - இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
6 நெல்லிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
அக்டோபர் 17, 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாள் காத்திருக்காம் -
சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
பரோட்டா கடை சிக்கன் சால்னா டேஸ்ட்டா இருப்பதன் ரகசியம் இதாங்க!
Parotta Kadai Style Chicken Salna Recipe In Tamil: விடுமுறை நாளில் உங்கள் வீட்டில் சப்பாத்தி, பூரி என்று செய்து சாப்பிடுவீர்களா? அதற்கு எப்பவும் ஒரே சுவையில் தான் சிக்கன் சைடு டிஷ் செய்வீர்களா? சற்று வித்தியாசமாக அதுவும் ஹோட்டல் ஸ்டைல் சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் பரோட்டா கடை சிக்கன் சால்னாவை செய்யுங்கள். இந்த சால்னா பரோட்டாவுடன் மட்டுமின்றி, சப்பாத்தி, பூரி என அனைத்துடனும் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக பரோட்டா சால்னா மட்டும் தனிசுவையில் இருக்க காரணம் அதை செய்யும் பக்குவம் தான்.

உங்களுக்கு பரோட்டா கடை சிக்கன் சால்னாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பரோட்டா கடை சிக்கன் சால்னா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
தேங்காய் மசாலாவிற்கு...
* கடலை எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கசகசா - 1 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1 பெரிய மூடி
* மல்லித் தூள் - 2 1/2 டேபிள் ஸ்பூன்
* சிக்கன் மசாலா - 2 1/2 டேபிள் ஸ்பூன்
* பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
சால்னா தாளிப்பதற்கு...
* கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1
* கிராம்பு - 3
* அன்னாசிப்பூ - 1
* ஏலக்காய் - 2
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெரிய வெங்காயம் - 2
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* பெரிய தக்காளி - 2
* உப்பு - சுவைக்கேற்ப
* சிக்கன் - 1/2 கிலோ
* அரைத்த மசாலா
* தண்ணீர் - தேவையான அளவு
* புதினா - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் கடலை
எண்ணெய் ஊற்றி சூடானதும், கசகசா மற்றும் துருவிய தேங்காயை சேர்த்து,
ஈரப்பதம் போகும் வரை நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் மல்லித் தூள் மற்றும் சிக்கன் மசாலாவை சேர்த்து மிதமான
தீயில் வைத்து நன்கு வறுக்க வேண்டும்.
* பின் அதில் பொட்டுக்கடலையை சேர்த்து வதக்கி இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் கடலை
எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, ஏலக்காய்,
சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க
வேண்டும்.
* பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து 1 நிமிடம் மிதமான
தீயில் வைத்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
தூவி, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் சிக்கனை கழுவி சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும்.
* பின் அதில் அரைத்த மசாலாவை சேர்த்து கிளறி, சால்னாவிற்கு தேவையான
அளவு நீரை ஊற்றி கிளறி, பொடியாக நறுக்கிய புதினா மற்றும் கொத்தமல்லியை
சேர்த்து கிளறி, குக்கரை மூடி, மிதமான தீயில் வைத்து 1 விசில் விட்டு
இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, சிறிது நறுக்கிய புதினா,
கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சுவையான பரோட்டா கடை சிக்கன் சால்னா
தயார்.



Click it and Unblock the Notifications
