Latest Updates
-
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும்
எப்பவும் ஒரே மாதிரி ரவா தோசையை செய்யாம.. ஒருடைம் பன்னீர் வெச்சு இப்படி செய்யுங்க...
Paneer Rava Dosa Recipe In Tamil: உங்கள் வீட்டில் தோசை மாவு தீர்ந்துவிட்டதா? அந்த நேரத்தில் நீங்கள் ரவா தோசையை தான் செய்வீர்களா? ஆனால் எப்போதும் வெறும் ரவா தோசையை செய்யாமல், வீட்டில் பன்னீர் இருந்தால், பன்னீர் ரவா தோசையை செய்யுங்கள்.
இந்த தோசை செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். இதில் புரோட்டீன் அதிகம் இருப்பதால், டயட்டில் இருப்போருக்கும் இது ஏற்ற காலை உணவாக இருக்கும்.

உங்களுக்கு பன்னீர் ரவா தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன்னீர் ரவா தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ரவை - 1 கப்
* அவல் - 1/2 கப்
* அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* தயிர் - 1/2 கப்
* தண்ணீர் - 1 1/4 கப் + 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன்
* எண்ணெய் - தேவையான அளவு
மசாலாவிற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
* பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* பன்னீர் - 200 கிராம் (துருவியது)
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் ரவை, அவல், அரிசி மாவு, தயிர்
சேர்த்து, அத்துடன் 1 1/4 கப் நீரை ஊற்றி கட்டிகளின்றி நன்கு கலந்து,
15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து 1 நிமிடம்
வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து
வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய் தூள், மல்லித் தூள்
சேர்த்து குறைவான தீயில் வைத்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து, மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் துருவிய பன்னீரை சேர்த்து கிளறி, குறைவான தீயில் வைத்து,
3 நிமிடம் வேக வைத்து, கொத்தமல்லி தூவி கிளறி இறக்கிக் கொள்ள
வேண்டும்.
* அடுத்து ஊற வைத்துள்ள ரவை கலவையை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு
மென்மையாக அரைத்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அத்துடன் 1/2 கப் நீரை
ஊற்றி கிளறி, தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், ஒரு
கரண்டி மாவை ஊற்றி, மிதமான தீயில் வைத்து, மேல் மாவு லேசாக வெந்ததும்,
மேலே ஒரு ஸ்பூன் பன்னீர் மசாலாவை வைத்து பரப்பி, எண்ணெய் ஊற்றி, பின்
அதை திருப்பிப் போட்டு தோசைக் கரண்டியால் லேசாக அழுத்திவிட்டு
எடுத்தால், சுவையான பன்னீர் ரவா தோசை தயார்.
Image Courtesy: Madras Samayal



Click it and Unblock the Notifications