Latest Updates
-
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம் இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
Paal Paniyaram Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் பிள்ளைகளுக்கு அவர்களின் பசியைப் போக்கும் வகையில் ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் பால் பணியாரத்தை செய்து கொடுங்கள். அதுவும் இந்த பால் பணியாரத்தை ஒரு கப் கோதுமை மாவைக் கொண்டு செய்யலாம். இந்த பால் பணியாரம் செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.
உங்களுக்கு பால் பணியாரத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பால் பணியாரம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* கோதுமை மாவு - 1 கப்
* ரவை - 1/4 கப்
* சர்க்கரை பொடி - 1/4 கப்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 கப்
* சோடா உப்பு - 1 சிட்டிகை
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
பால் செய்வதற்கு...
* முந்திரி - 5
* ஏலக்காய் - 2
* நீர் - சிறிது
* காய்ச்சிய பால் - 3/4 லிட்டர்
* சர்க்கரை - 1/4 கப்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, ரவை, பொடித்த சர்க்கரை,
உப்பு, ஏலக்காய் தூள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி போண்டா மாவு பதத்திற்கு
பிசைந்து, மூடி வைத்து 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதற்குள் பாலை தயார் செய்து கொள்ளலாம். அதற்கு மிக்சர் ஜாரில்
முந்திரி, ஏலக்காயை எடுத்து, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் 3/4 லிட்டர் பாலை ஊற்றி, பின் அதில்
சர்க்கரை மற்றும் அரைத்த பாதாம் விழுதை சேர்த்து, 1/2 லிட்டராக வரும்
வரை கொதிக்க வைக்க வேண்டும்.
* பால் நன்கு கொதித்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, மூடி வைக்க
வேண்டும்.
* பின் ஊற வைத்துள்ள மாவை எடுத்து, அதில் 1 சிட்டிகை சோடா உப்பை
சேர்த்து நன்கு கைகளால் பிசைய வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* பின்பு பிசைந்த மாவை எடுத்து, எண்ணெயில் கொஞ்சம் கொஞ்சமாக கிள்ளிப்
போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
* பின் பொரித்ததை பாலில் சேர்த்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின்
பரிமாறினால், சுவையான பால் பணியாரம் தயார்.
Image Courtesy: kurinji. com



Click it and Unblock the Notifications
