Latest Updates
-
27 ஆண்டுக்கு பின் சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரம் செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்...! -
4 முட்டை இருந்தா இந்த செட்டிநாடு ஸ்டைல் குருமாவை டக்குனு பண்ணுங்க... தோசை, சப்பாத்திக்கு செமையா இருக்கும்...! -
அழகான இதயமும், தூய்மையான ஆன்மாவும் கொண்ட 4 ராசிகள் இவர்கள்தான்... உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம்..உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க வீட்டு சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மிச்சமிருக்குனு தெரியணுமா? இதை பண்ணுங்க... சரியா கண்டுபிடிச்சிரலாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் அஸ்தமனமானவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்... -
பஞ்சு மாதிரி பன் தோசை-அட்டகாசமான பூண்டு கார சட்னி காம்போ ரெசிபி... ட்ரை பண்ணுங்க... வேற லெவலில் இருக்கும்...! -
இன்றைய ராசிபலன் 15 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்கப்போகுதாம்...! -
வார ராசிபலன் (15 March 2026-21 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை டபுளாக உயரும்..
ஹோட்டல் மாதிரி வீட்ல மொறுமொறுனு ஆனியன் ரவா தோசை செய்யணுமா? இப்படி செய்யுங்க... தாறுமாறா இருக்கும்...!
Onion Rava Dosa Recipe in Tamil: வீட்டில் என்ன தான் தினம் தோசை இட்லி என செய்து சாப்பிட்டாலும் ஹோட்டல்களுக்கு சென்றால் ஆர்டர் செய்வது அதே தோசையை தான். என்னதான் விதவிதமாக தோசை சாப்பிட்டாலும், ரவை தோசையை விரும்பி சாப்பிடும் சிலரும் இருக்க தான் செய்கிறார்கள். மொறுமொறுன்னு நல்ல சிவந்து இருக்கும் ரவா ரோஸ்ட் யாருக்கு தான் பிடிக்காது. சரி வாங்க ஆனியன் ரவா ரோஸ்ட் எப்படி செய்யறதுன்னு இங்க பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:
- ரவை - ஒரு கப்
- மைதா - ¾ கப்
- அரிசி மாவு - ¾ கப்
- முந்திரி - ஒரு கைப்பிடி அளவு
- சீரகம் - ½ டீ ஸ்பூன்
- மிளகு - ½ டீ ஸ்பூன்
- இஞ்சி - சிறிதளவு (½ இன்ச் அளவு)
- பச்சை மிளகாய் - 5
- கருவேப்பிலை - ஒரு கொத்து
- சர்க்கரை - 1 டீ ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- பெரிய வெங்காயம் - 2
- பெருங்காயத்தூள் - ½ டீ ஸ்பூன்
- தண்ணீர் - 5 கப்
செய்முறை:
- வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- இஞ்சியை மண் இல்லாமல் அலசி தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- பச்சை மிளகாயை கழுவி பொடிப்பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- மிளகை உரலில் சேர்த்து ஒன்று இரண்டாக உடைத்து எடுத்து கொள்ளவும்.
- கருவேப்பிலையையும் கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- முந்திரி பருப்பையும் ஒன்றிரண்டாக உடைத்து வைக்கவும்.
- ரவையிலிருந்து ஒரு கைப்பிடி அளவு ரவையை மட்டும் தனியாக எடுத்து வைத்து விடவும்.
- பின் ஒரு பாத்திரத்தை எடுத்து, அதில் மீதம் இருக்கும் ரவையை போடுங்கள்.
- அதனுடன் மைதா, மற்றும் அரிசி மாவை சேர்த்து கொள்ளவும்.
- அதில் உடைத்து வைத்திருக்கும் முந்திரியும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
- சீரகம் மற்றும் ஒன்று இரண்டாக இடித்து வைத்த மிளகை அதில் சேர்க்கவும்.
- பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலையையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
- இதனுடன் சர்க்கரை, தேவையான அளவு உப்பு மற்றும் நான்கு கப் அளவிற்கு தண்ணீரை ஊற்றி கட்டி விடாத அளவிற்கு நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
- கலந்த இந்த மாவை அரை மணி நேரம் அப்படியே மூடி வைத்து விடுங்கள்.
- பின் இந்த மாவில் நாம் ஏற்கனவே எடுத்து வைத்திருக்கும் ஒரு கைப்பிடி அளவு ரவை மற்றும் ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
- அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்து சூடானதும் அதில் எண்ணெய் ஊற்றவும்.
- பின் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை எடுத்து தூவி விட வேண்டும்.
- வெங்காயம் அந்த எண்ணெயில் வெந்து கொண்டு இருக்கும் பொழுது அடுப்பை குறைவான தீயில் வைத்துவிட்டு, தயார் செய்து வைத்திருக்கும் மாவை நன்றாக கலந்து வெளிப்புறத்தில் இருந்து உள்புறமாக ஊற்ற வேண்டும்.
- பிறகு தோசை மீது நெய் அல்லது எண்ணெயை ஊற்றி குறைந்த தீயில் நன்றாக வேக விடுங்கள்.
- தோசை நன்றாக சிவக்க ஆரம்பித்த பிறகு தோசையை மடக்கி எடுத்து வைத்து விடலாம்.
- சுவையான ஆனியன் ரவா ரோஸ்ட் தயாராகிவிட்டது.



Click it and Unblock the Notifications











