Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
4 முட்டையும், 4 பிரட்டும் இருந்தா போதும்.. காலையில 10 நிமிஷத்துல இந்த டிபனை செய்யுங்க.. அசத்துபோவீங்க..
Omelette Upma Recipe In Tamil: காலையில் லேட்டாக எழுந்துவிட்டீர்களா? 10 நிமிடத்தில் காலை டிபனை செய்ய வேண்டுமா? இட்லி, தோசை செய்யலாம் என்றாலே வீட்டில் உள்ளோர் கோபப்படுகிறீர்களா? ஏதாவது ஸ்பெஷலாக செய்து கொடுக்க கேட்கிறார்களா? அப்படியானால் உப்புமா செய்யுங்கள்.
அதுவும் வழக்கமாக செய்யும் வெள்ளை ரவை அல்லது கோதுமை ரவை கொண்டு உப்புமா செய்யாமல், வீட்டில் முட்டையும், பிரட்டும் இருந்தால், அவற்றைக் கொண்டு உப்புமா செய்யுங்கள். இந்த ஆட்லெட் உப்புமா செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். முக்கியமாக இது வழக்கமாக சாப்பிடும் உப்புமாவில் இருந்து வேறுபட்டிருக்கும். இப்படி உப்புமாவை செய்தால், உப்புமா பிடிக்காத குழந்தைகள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு ஆம்லெட் உப்புமாவை எப்படி சய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆம்லெட் உப்புமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முட்டை - 4
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து (பொடியாக நறுக்கியது)
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* பிரட் - 4
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் 4 முட்டைகளை உடைத்து ஊற்ற வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை
சேர்க்க வேண்டும்.
* அடுத்து அதில் கறிவேப்பிலை, மிளகுத் தூள் மற்றும் சுவைக்கேற்ப
சிறிது உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு பிரட் துண்டுகளை எடுத்து, அவற்றை சிறுசிறு துண்டுகளாக்கிக்
கொள்ள வேண்டும்.
* பிறகு துண்டுகளாக்கப்பட்ட பிரட் துண்டுகளை முட்டை கலவையுடன்
சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரட் முட்டைக் கலவையை சேர்த்து நன்கு கிளறி
விட்டால், சுவையான ஆம்லெட் உப்புமா தயார்.



Click it and Unblock the Notifications