Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
ஓட்ஸை வெச்சு கஞ்சி, உப்புமா-ன்னு செய்யாம.. ஒருவாட்டி இப்படி பணியாரம் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
Oats Spinach Paniyaram Recipe In Tamil: உங்கள் வீட்டில் காலையில் பெரும்பாலும் இட்லி, தோசை தான் செய்வீர்களா? இப்படி இட்லி, தோசை செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான அதே சமயம் சத்தான ஒரு டிபனை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் ஓட்ஸ் உள்ளதா? அப்படியானால் அந்த ஓட்ஸைக் கொண்டு காலையில் 15 நிமிடத்தில் ஒரு சுவையான பணியாரத்தை டிபனாக செய்யுங்கள்.
அதுவும் இந்த பணியாரத்துடன் பசலைக்கீரையும் சேர்ப்பதால், இது ருசியானது மட்டுமின்றி, சத்தானதும் கூட. முக்கியமாக இப்படி செய்யும் போது குழந்தைகளும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பணியாரத்திற்கு தேங்காய் சட்னி, கார சட்னி, தக்காளி சட்னி போன்றவை சிறந்த சைடு டிஷ்ஷாக இருக்கும்.

உங்களுக்கு ஓட்ஸ் பசலைக்கீரை பணியாரத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஓட்ஸ் பசலைக்கீரை பணியாரம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ஓட்ஸ் - 1 கப்
* பொட்டுக்கடலை - 1/4 கப்
* அரிசி மாவு - 1/4 கப்
* தயிர் - 1/4 கப்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2-3
* பசலைக்கீரை - 1 கையளவு
* கொத்தமல்லி - 1 கையளவு
* உப்பு - 1 1/2 டீஸ்பூன்
* இஞ்சி - 1 இன்ச் (துருவியது)
* தண்ணீர் - 1 கப்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* ஸ்வீட் கார்ன் - 1/4 கப்
* பச்சை பட்டாணி - 1/4 கப்
* கேரட் - 1/4 கப் (துருவியது)
தாளிப்பதற்கு...
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் 1 கப் ஓட்ஸ், 1/4 கப் பொட்டுக்கடலை, 1/4
கப் அரிசி மாவு, 1/4 கப் தயிர் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அத்துடன் 1 டீஸ்பூன் சீரகம் , 2-3 பச்சை மிளகாய், 1 கையளவு
பசலைக்கீரை, 1 கையளவு கொத்தமல்லி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் துருவிய இஞ்சி, உப்பு மற்றும் 1 கப் நீரை ஊற்றி
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த மாவை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், 1/4 கப் ஸ்வீட் கார்ன்,
1/4 கப் நற்பதமான பச்சை பட்டாணி மற்றும் 1/4 கப் துருவிய கேரட்டை
சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய்
ஊற்றி சூடானதும், 1/2 டீஸ்பூன் கடுகு, 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
மற்றும் 1 டீஸ்பூன் கடலைப் பருப்பு சேர்த்து தாளித்து, மாவுடன்
சேர்த்து கிளறி விட வேண்டும்.
* இறுதியாக பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், குழிகளில்
சிறிது நெய் ஊற்றி, தயாரித்து வைத்துள்ள மாவை குழிகளில் ஊற்றி,
முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான ஓட்ஸ் பசலைக்கீரை
பணியாரம் தயார்.



Click it and Unblock the Notifications








