Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
டயட்டில் இருப்போருக்கான... ஓட்ஸ் குழி பணியாரம்
நீங்கள் டயட்டில் இருக்கிறீர்களா? இன்று காலை என்ன சமையல் செய்வதென்று தெரியாமல் புலம்பிக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் ஓட்ஸ் உள்ளதா? அப்படியானால் அந்த ஓட்ஸ் கொண்டு குழி பணியாரம் செய்யுங்கள்.
நீங்கள் டயட்டில் இருக்கிறீர்களா? இன்று காலை என்ன சமையல் செய்வதென்று தெரியாமல் புலம்பிக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் ஓட்ஸ் உள்ளதா? அப்படியானால் அந்த ஓட்ஸ் கொண்டு குழி பணியாரம் செய்யுங்கள். ஓட்ஸ் குழி பணியாரம் செய்வது மிகவும் சுலபம். மேலும் இது அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாகவும் இருக்கும். குறிப்பாக உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், ஓட்ஸ் சாப்பிடுவது நல்லது. ஆனால் உங்களுக்கு ஓட்ஸ் சாப்பிட பிடிக்காதா? அத்தகையவர்கள் ஓட்ஸை குழி பணியாரமாக செய்து, சட்னியுடன் தொட்டு சாப்பிட்டால் நிச்சயம் பிடிக்கும்.

உங்களுக்கு ஓட்ஸ் குழி பணியாரம் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஓட்ஸ் குழி பணியாரம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* இன்ஸ்டன்ட் ஓட்ஸ் - 3 கப்
* அரிசி மாவு - 1 1/2 கப்
* தயிர் - 1 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* பேக்கிங் சோடா - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* துருவிய கேரட் - 1 கப்
* கொத்தமல்லி - ஒரு கையளவு (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ், அரிசி மாவு, தயிர் மற்றும் நீரை ஊற்றி பணியார மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு கேரட் மற்றும் கொத்தமல்லியை சேர்த்து 30 நொடிகள் வதக்கி இறக்க வேண்டும்.
* பின்பு வதக்கியதை ஓட்ஸ் கலவையுடன் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, அதன் குழிகளில் சிறிது எண்ணெய்களை ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* பின் அந்த பணியாரக் குழிகளில் தயாரித்து வைத்துள்ள பணியார மாவை ஊற்றி, அடிப்பகுதி வெந்ததும், திருப்பிப் போட்டு வேக வைத்து எடுத்தால், ஓட்ஸ் குழி பணியாரம் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
