Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
வறுத்தரைச்ச மீன் குழம்பு
மீனில் ஒமேகா-3 ஃபேட்டி அமிலம் அதிகம் உள்ளது. எனவே வாரம் ஒருமுறையாவது தவறாமல் மீன் சாப்பிட வேண்டும். அதிலும் அந்த மீனை குழம்பு வைத்து சாதத்துடன் சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். மீன் குழம்பை பலவாறு சமைக்கலாம்.
இப்போது அதில் ஒன்றான வறுத்தரைச்ச மீன் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மீன் (உங்களுக்கு விருப்பமானது)- 300 கிராம்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
வறுத்து அரைப்பதற்கு...
தேங்காய் - 1 கப் (துருவியது)
மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 4
சின்ன வெங்காயம் - 5
பூண்டு - 5 பற்கள்
புளிச்சாறு - 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் புளியைத் தவிர, அனைத்து பொருட்களையும் சேர்த்து பொன்னிறமாக வதக்கி இறக்க வேண்டும்.
பின் அவற்றை மிக்ஸியில் போட்டு, அத்துடன் புளிச்சாற்றினை சேர்த்து மென்மையான பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியில் அந்த அரைத்த மசாலாவை போட்டு, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி, நன்கு கொதித்ததுட், மூடி வைத்து எண்ணெய் தனியாக பிரியும் வரை மீண்டும் கொதிக்க விட வேண்டும்.
பிறகு அதில் மீன் துண்டுகளை சேர்த்து மூடி வைத்து, மீன் நன்கு வேகும் வரை கொதிக்க விடவும்.
அடுத்து மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, குழம்புடன் சேர்த்து இறக்கினால், வறுத்தரைச்ச மீன் குழம்பு ரெடி!!!



Click it and Unblock the Notifications