Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
பஞ்சாபி முட்டை மசாலா
முட்டையைக் கொண்டு பலவாறு சமைக்கலாம். அதில் சாதத்திற்கு ஏற்றவாறு முட்டை குழம்பு, முட்டை மசாலா என்று செய்வோம். இப்படி செய்யும் முட்டை மசாலாவில் பல ஸ்டைல்கள் உள்ளன. அந்த வகையில் ஒன்று தான் பஞ்சாபி முட்டை மசாலா. இந்த ரெசிபி செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, மிகுந்த சுவையோடும் இருக்கும்.
சரி, இப்போது அந்த பஞ்சாபி முட்டை மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
முட்டை - 4 (வேக வைத்து தோலுரித்தது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பிரியாணி இலை - 1
சீரகம் - 1 டீஸ்பூன்
தக்காளி சாறு - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
காய்ந்த வெந்தய இலை - 1 டேபிள் ஸ்பூன் (கையால் பொடி செய்தது)
உப்பு - தேவையான அளவு
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
மசாலா பேஸ்ட்டிற்கு...
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 1 இன்ச்
பூண்டு - 5 பற்கள்
கிராம்பு - 2
பட்டை - 1
சோம்பு - 1 டீஸ்பூன்
தக்காளி - 2
செய்முறை:
* முதலில் மசாலா பேஸ்ட்டிற்கு கொடுத்த பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு, நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பிரியாணி இலை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து, தீயை குறைவில் வைத்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், மாங்காய் தூள், தக்காளி சாறு சேர்த்து 4-5 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்னனர் அரைத்து வைத்துள்ள மசாலா பேஸ்ட்டை சேர்த்து, 5-6 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் உப்பு, கரம் மசாலா சேர்த்து 2-3 நிமிடம் வதக்கி, தண்ணீர் ஊற்றி, வேக வைத்துள்ள முட்டையை இரண்டாக வெட்டி போட்டு, தீயை குறைவில் வைத்து, 5-6 நிமிடம் கொதிக்க விட்டு, காய்ந்த வெந்தய இலையை தூவி இறக்கினால், சுவையான பஞ்சாபி முட்டை மசாலா ரெடி!!!



Click it and Unblock the Notifications